பதிவு செய்த நாள்
24
பிப்
2016
11:02
சென்னை,: முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள, 6,868 கோவில்களில், இன்று மரக்கன்று நடும் விழா நடக்கிறது.முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள், அ.தி.மு.க.,வினரால் மட்டுமின்றி, தமிழக அரசின் ஒவ்வொரு துறை சார்பிலும், சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அறநிலையத் துறை சார்பில், 122 கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது; அடுத்த நிகழ்வாக, இன்று மரக்கன்று நடும் விழா நடக்கிறது. அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, 32 மாவட்டங்களில் உள்ள, 6,868 கோவில்களில், இன்று மரக்கன்று நடும் விழா நடக்கிறது. சைவ கோவில்களில் வில்வ மரக்கன்று; வைணவ கோவில்களில் புன்னை, மகிழம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்த விழாவில், அமைச்சர்கள், அ.தி.மு.க.,வினர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.