பதிவு செய்த நாள்
25
பிப்
2016
11:02
தங்கவயல்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு, தொடர் ஓட்டம் மூலம் தங்கவயலில் இருந்து ஜோதி கொண்டு செல்லப்படுகிறது.தங்கவயலில், 50க்கும் மேற்பட்ட மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மன்றங்கள் உள்ளன. இந்த மன்றங்களின் இளைஞரணியினர், நாளை ராபர்ட்சன்பேட்டை காந்தி சிலை அருகிலிருந்து சல்டானா சதுக்கம் வரை, ஜோதியை கொண்டு வருகின்றனர். அங்கிருந்து தொடர் ஓட்டமாக சென்று, மேல்மருவத்துார் பங்காரு அடிகளாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.இந்த தொடர் ஓட்டத்துக்காக, இளைஞரணியினர், கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து விரதம் மேற்கொண்டுள்ளனர். இந்த தொடர் ஓட்டத்தில், 500 பேர் இடம் பெறுகின்றனர். தொடர் ஓட்டத்தை, ஒருங்கிணைந்த வார வழிபாட்டு மன்ற தங்கவயல் நகர தலைமை அமைப்பின் தலைவர் தீனன், பொது செயலர் சேகர் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். ஏற்கனவே, முல்பாகல் வார வழிபாட்டு மன்றத்திலிருந்து பக்தி ஜோதியை தங்கவயலுக்கு கொண்டு வந்து, இங்கிருந்து மருவத்துார் எடுத்துச்சென்றுள்ளனர்.