திருச்செங்கோடு மாசி குண்டம் விழா: பக்தர்கள் தீ மிதிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2016 12:02
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, சின்ன ஓம்காளிஅம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழாவில், 10 ஆயிரம் பேர் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். திருச்செங்கோடு, சின்ன ஓம்காளிஅம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழா கடந்த, 12ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா, நேற்று நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் அதிகாலை, 60 அடி நீளமுள்ள குண்டத்தில் தீ மிதித்தனர். இதில் நோய் தீர்ந்தவர்கள், குழந்தை பேறு பெற்றவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர், மாற்றுத்திறனாளிகள் என பலரும் பூக்குழியில் இறங்கினர். பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாளை மறுநாள் (27ம் தேதி) அம்மன் திருவீதி உலாவுடன் மாசிக்குண்டம் நிறைவடைகிறது.