பதிவு செய்த நாள்
25
பிப்
2016
12:02
பாலக்கோடு: பாலக்கோடு, பனங்காடு, புதூர் பொன் மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக, 23ம் ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 22ம் தேதி அம்மனுக்கு கொலு வைத்தலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் மற்றும் திரவுபதி அம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை, 4 மணி முதல் அலகு குத்துதல், தீச்சட்டி, பால்குடம், மாவிளக்கு ஊர்வலம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து துவங்கி, புதூர் மாரியம்மன் கோவில் சென்றடைந்தது. காலை, 11.30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் திரவுபதி அம்மன் கரகம், பம்பை முழங்க புதூர் மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பல பக்தர்கள் அலகு குத்தி லாரி உள்ளிட்ட வாகனங்களை மாரியம்மன் கோவிலுக்கு இழுத்துச் சென்றனர்.