பதிவு செய்த நாள்
26
பிப்
2016
10:02
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நேற்று, திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருப்போரூர் கந்தசாமி கோவில் மாசி பிரம்மோற்சம் கொடியேற்றத்துடன், கடந்த, 13ல் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று, திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை, 7:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், வள்ளி, தெய்வானைஉடன் கந்தசாமி பெருமான், உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின், திருக்கல்யாணத்திற்காக, யாகங்கள் வளர்க்கப்பட்டு, சம்பிரதாயங்கள் அனைத்தும் செய்யப்பட்டன. 8:30 மணிக்கு, கந்தசாமி பெருமான், வள்ளியை மணம் முடித்தார். இதில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின், திருப்போரூரில் உள்ள நான்கு மாட வீதிகளில், திருவீதி உலா சென்ற பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.