தட்சிணகாளி கோவிலில் மாசி விழா: பக்தர்கள் தீ மிதிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2016 10:02
சூரமங்கலம்: சேலம், ஜாகீர்அம்மாபாளையம், காவடிபழனியாண்டவர்கோவில், தட்சணகாளியம்மன் 44வது ஆண்டு மாசி விழாவை முன்னிட்டு நடந்த, தீமிதிவிழாவில், விரதம் இருந்து 150 பேர் தீ மதித்தனர். 16ம் தேதி பூசாட்டுதலுடன் துவங்கிய விழா, மஹாசண்டிஹோமம், சக்தி அழைத்தல், பூகரகம், அக்னிகிரகம் என தினமும் ஒரு விழா நடத்தபட்டது. முக்கிய நிகழ்ச்சியான தீ மிதிவிழா நேற்று நடந்தது. முன்னதாக காலையில் விரதம் இருந்து 150 பேர் கையில் காப்பு கட்டினர். அதன் பிறகு குண்டம் அமைக்கபட்டது. மாலையில் விரதம் இருந்தவர்கள் ஊர்வலமாக சென்று, நீர் நிலையில் நீராடி குண்டத்திற்கு வந்தனர். முதலாவதாக கோவில் தலைமை பூசாரி சோமசுந்தரம் குண்டத்தில் இறக்க அவரை தொடந்து பக்தர்கள் பக்திபரவசத்துடன் தீ மிதித்தனர். சில ஆண்கள், பெண்கள் கையில் குழந்தையுடன் தீ மிதித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பக்திபரவசத்துடன் தீமிதித்தனர். மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.