வாழப்பாடி: வாழப்பாடியில், செல்லியம்மன் மற்றும் விநாயகர், சரஸ்வதி, முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா, நடந்தது. வாழப்பாடி பேரூராட்சி, செல்லியம்மன் நகரில் உள்ள செல்லியம்மன் கோவில், 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில், விநாயகர், தாமரைக்குள சரஸ்வதி, முனீஸ்வரன் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா மற்றும் சுவாமிகள் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.