பழநி மாரியம்மன் கோயில் விழா: 2511 குடங்களில் பால்அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2016 10:03
பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பழநி வ.உ.சி., மன்ற தலைமையகம் சங்கம் சார்பில் பாண்டிய வேளாளர் மடத்திலிருந்து 2511 பால்குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு நகரின்முக்கிய வீதிகள் வழியாக சென்று மாரியம்மன்கோயிலை அடைந்தது. உச்சிக்காலத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு அன்னத்தால் செய்யப்பட்ட ராஜமாதங்கி அலங்காரத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 64 ஸ்தானிக மிராஸ் பண்டாரங்கள் சார்பில் உற்சவசாந்தி விழா நடந்தது. சண்முகநதியிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. சித்தனாதன் அன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேலு, அசோக், ஆர்.வி.எஸ். பெருமாள், கந்தவிலாஸ் பாஸ்கரன் மற்றும் நகரமுக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வ.உ.சி.மன்ற தலைமையகத்தினர், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சங்கத்தினர் செய்தனர்.