Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ... திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா! திருச்செந்தூர் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஆக
2011
10:08

ஒவ்வொரு மனிதனும் ஹலாலான (அனுமதிக்கப்பட்ட) வழியில் சம்பாதித்த பொருளைக் கொண்டே சாப்பிட வேண்டும். இங்கு "ஹலாலான என சொல்லப்படுவது தொழிலையும் குறிக்கிறது. வட்டி போன்ற தொழில்களை இஸ்லாம் கண்டிக்கிறது. அதுபோன்ற தொழில் அல்லாமல் நியாயமான வழிகளில் சம்பாதிக்கப்படும் பொருளைக் கொண்டு ஒவ்வொருவரும் உணவு உண்ண வேண்டும். "எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட, வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் உழைத்து சம்பாதித்த உணவையே உண்பார்களாய் இருந்தார்கள்,என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். உழைப்பின் மூலம் பிச்சை எடுப்பது தடுக்கப்படுகிறது.

அல்லாஹ் தூயவன் என்பதால், நியாயமான வழியில் வரும் பொருட்களையே ஏற்றுக் கொள்கிறான். கொலை செய்தல், கொள்ளை அடித்தல் போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பொருள்களை இறைவனுக்கு அர்ப்பணித்தாலும், அதை அவன் ஏற்றுக் கொள்வதில்லை. குர்ஆனில் அல்லாஹ், ""தூதர்களே! தூய ஆகாரத்தையே புசித்து, நற்செயல் புரியுங்கள். நம்பிக்கை உடையவர்களே! நாம் உங்களுக்கு அருளிய ஹலாலான தூய ஆகாரத்தையே புசியுங்கள், எனச் சொல்கிறான். ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டு அழுக்கடைந்த ஆடைகளுடன் சிரமமான பயணம் மேற்கொண்டு, புண்ணியத்தலம் ஒன்றுக்கு வருகின்றான். ஆனால், அவன் சம்பாதித்த பணமோ ஹராமானது (தடுக்கப்பட்ட வழிகளில் சம்பாதித்தது) ஆகும். இவ்வாறு தன்னை வணங்குபவனின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்பதில்லை. அவன் எவ்வளவுதான் இறைவனிடம் இறைஞ்சிக் கேட்டாலும், அவனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை. எனவே உழைப்பே உயர்ந்தது என்பது இன்றைய நமது சிந்தனையாகட்டும் .

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.39 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.34 மணி.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar