Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்: ஏழைகளுக்கு ... பத்ரிநாத், கேதார்நாத்தில் பக்தர்களுக்கு வசதிகள்! பத்ரிநாத், கேதார்நாத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணி கோவில் ஆண்டு பெருவிழா: அனைத்து ஏற்பாடும் தயார்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஆக
2011
10:08

வேதாரண்யம்: ""நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்காக பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது, என்று கோவில் அதிபர் மைக்கேல் அடிகளார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி துவங்கி செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடக்கிறது. இதற்காக வேளாங்கண்ணியில் பக்தர்களின் தேவைக்கு 24 மணி நேரமும், குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. பத்து இடங்களில் புதிதாக கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. நடைபயணமாக வரும் பக்தர்கள் தங்க வசதியாக செபஸ்தியார், புனித தொன் போஸ்கோ, புனித தாமஸ் திருப்பயணியர்கள் தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருட்டு மற்றும் குற்ற செயல்கள் தடுக்க ஆங்காகே சுழல் கேமராக்கள் மாவட்ட போலீஸ் சார்பில் பொறுத்தப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ், கார் போன்ற வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த உப்புத்திடல், திருத்துறைப்பூண்டி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் புனித பீட்டர் பார்க்கிங் ஏரியா, நாகை சாலையில் புதுமை குளம் அருகில் புனித பவுல் பார்க்கிங் ஏரியா, புனித கிரிஸ்டோபர் ஏரியா மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள புனித மரியன்னை கோவில் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கொடியேற்ற நாளான 29ம் தேதி அன்றும் தேர் பவனி நடக்கின்ற செப்டம்பர் ஏழாம் தேதி அன்றும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, வாகனங்கள் அனைத்தும் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே நிறுத்தப்படும். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்தாண்டு முதல் ஒரு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பறவை சாலை வழியாக பஸ்களும், உச்சி மரத்தடி தெரு, பிள்ளையார் கோவில் தெரு, புனித கிரிஸ்டோபர் தெரு வழியாக கார், வேன், டூவீலர்கள் செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நடை பயணமாக வரும் பக்தர்கள் ஆர்ச் வழியாக மாதா குளம் செல்லும் வழியில் சிறிது தூரம் சென்று புதிதாக கட்டப்பட்டு வரும் விடியற்காலை விண்மின் கோவிலுக்கு பின்புறமாக சென்று கோவிலை அடையாலம். இவ்வாறு மைக்கேல் அடிகளார் தெரிவித்தார். பேட்டியின் போது, பங்குதந்தை ஆரோக்கியதாஸ், பொருளாளர் டர்சிஸ்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar