Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்தாலம்மன் கோயில் திருவிழா செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி! செம்பொற்சோதிநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒப்பலியப்பன் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
ஒப்பலியப்பன் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

04 ஏப்
2016
12:04

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பலியப்பன் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது.

இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான பூமிதேவியுடன் ஒரே சன்னதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் இத்தலத்தை  திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரிய தலமாகும். இங்கு மூலவர் பெருமாளுக்கு உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த வைணத்தலங்களில் இல்லாத வகையில் இங்கு மட்டுமே துலாபாரம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.  இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி பிரமோற்சவம் 12 தினங்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழாவின் தொடக்கமாக கடந்த 25ம் தேதி வேங்கடாசலபதிப் பெருமாள் தாயாருடன் தங்ககொடிமரம் அருகே எழுந்தருள பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்களுடன், மங்கள வாத்தியங்கள் இசைக்க, கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 28ம் தேதி திங்கட்கிழமை 4ம் நாள் விழாவாக வெள்ளி கருட சேவையும், ஏப்ரல் 02ம் தேதி காலை திருவோணத்தன்று 9ம் நாள் விழாவாக திருத்தேரோட்டமும் வெகு சிறப்பாக நடந்தது. இதில் கலந்துக்கொண்ட பக்தர்கள் தேரை நான்கு முக்கிய வீதிவழியாக இழுத்து சென்றனார். தொடர்ந்து புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. பின்னர் வருகிற 05ம் தேதி விடையாற்றியுடன் பங்குனி பிரமோற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar