Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் ... சித்ரா பவுணர்மியில் சுவாமி தரிசனம்: வெள்ளியங்கிரியில் பக்தர்கள் கூட்டம்! சித்ரா பவுணர்மியில் சுவாமி தரிசனம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் கருநீல பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்!
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் கருநீல பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்!

பதிவு செய்த நாள்

23 ஏப்
2016
11:04

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணதிர கருநீல பட்டு உடுத்தி கள்ளழகர் திருக்கோலத்தில் பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார்.பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 17ல் காப்பு கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பெருமாள், கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து சுந்தரராஜப் பெருமாள் பூப்பல்லக்கில் வேல், கம்பு, ஈட்டி, வளரி ஏந்தி, கோடாரி கொண்டையிட்டு கள்ளழகர் திருக்கோலத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காவல் தெய்வம் கருப்பண்ணசாமியிடம் விடைபெற்ற அழகர் வாண வேடிக்கை, பக்தர்களின் கோவிந்த கோஷம் விண்ணதிர நேற்று அதிகாலையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அழகரை மஞ்சள் நீர் பீய்ச்சி அடித்து பக்தர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து காட்டுப்பரமக்குடி, மஞ்சள்பட்டினம் வழியாக ஆற்றுப்பாலம் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். மேலும் பெரியபஜார், எமனேஸ்வரம் வழியாக, இரவு 12 மணிக்கு காக்காதோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். வழிநெடுகிலும் மண்டகபடி மூலம் அழகருக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் பொன் சப்பரத்தை, காக்கா தோப்பு பெருமாள் கோவில் வரை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அழகரை தரிசித்தனர். ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி அகஸ்தியன், டிரஸ்டிகள் மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar