Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாங்கூர் பன்னிரு ரிஷபாரூட ... திருப்பரங்குன்றத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனி மாற்றுத் திருவிழா திருப்பரங்குன்றத்தில் ஆண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சையில் 23 பெருமாள் கோவிலில் கருடசேவை கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2016
10:05

தஞ்சாவூர், தஞ்சாவூர் உள்ள 23 பெருமாள் கோவில்களில் கருடசேவை நிகழ்ச்சி முக்கிய வீதிகளில் கோலாகலமாக நடந்தது.

Default Image
Next News

தஞ்சை பகுதியில் சோலைகள் சூழந்த ஓரிடத்தில் தங்கிய பராசர மகரிஷி, விஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். தேவலோகத்தில் பெற்ற அமிர்தத்தை,  சோலை அருகில் இருந்த புஷ்கரணியில்(குளத்தில்) ஊற்றினார். அது விஷ்ணு அமிர்த புஷ்கரணி என பெயர் பெற்றது. இதனால் அப்பகுதியே  செழிப்பு அடைந்தது. இந்த சமயத்தில் தண்டகாரண்யம் என்னும் வனத்தில் மழையின்றி பஞ்சம் நிலவியது.  அங்கிருந்து தஞ்சகாசுரன் என்பவன்,  பராசர மகரிஷி தங்கியிருந்த சோலையை வந்தடைந்தான். அசுர குணத்தால் பராசரரைத் துன்புறுத்தினான். பராசரர் தன்னைக் காக்கும்படி  விஷ்ணுவைச் சரணடைந்தார். நரசிம்ம வடிவத்தில் தோன்றிய விஷ்ணு, தஞ்சகாசுரனைக் கொன்று பராசரரைக் காத்தருளினார். மரண தருவாயில்  தஞ்சகாசுரன் தனது பெயரை அந்த இடத்துக்கு வைக்க வேண்டினான். எனவே அவ்வூர் தஞ்சாவூர் எனப் பெயர் பெற்றது. அந்த இடத்தில் விஷ்ணு,  நீலமேகப்பெருமாளாக கோவில் கொண்டார்.  பராசரரின் வேண்டுகோளை ஏற்று, ஒரு வைகாசி திருவோணத்தன்று விஷ்ணு லட்சுமி சமேதராக கரு டவாகனத்தில் காட்சியளித்தார். அதன் அடிப்படையில் கருடசேவை விழா இங்கு கொண்டாடப்படுகிறது. மே 27 முதல் 30 வரை நான்குநாள் விழா  நடக்கிறது. நேற்று (மே.27ல்)காலை நரச்சிம்மபெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் நடந்தது.

கருடசேவையை முன்னிட்டு, (மே.28ல்) காலை 6.00 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள், நரசிம்மர்,  மணிகுன்றப்பெருமாள், ஸ்ரீவேளூர் வரதராஜர், வெண்ணாற்றங்கரை கல்யாண வெங்கடேசர், கரந்தை யாதவ கண்ணன், கொண்டிராஜபாளையம்  யோகநரசிம்மர், கொண்டிராஜபாளையம் கோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜர், தெற்கு ராஜவீதி கலியுக வெங்கடேசர், அய்யங்கடைத்தெரு பஜார்  ராமசுவாமி, எல்லையம்மன் கோவில் தெரு ஜனார்த்தனர், கோட்டை பிரசன்ன வெங்கடேசர், கோவிந்தராஜர், மேல அலங்கம் ரங்கநாதர், மேலராஜ  வீதி விஜயராமர், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணர், சகாநாயக்கன் தெரு பூலோக கிருஷ்ணர், மா.சாவடி நவநீதகிருஷ்ணர் மற்றும் பிரசன்ன வெங்க÷ டசர், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி, சுக்காந்திடல் லட்சுமி நாராயணர், கரந்தை வாணியந்தெரு வெங்கடேசர், கொள்ளுப்பேட்டை தெரு ÷ வணுகோபாலர் ஆகிய கோவில்களில் இருந்து உற்ஸவர்கள், கருடவாகனத்தில் புறப்பட்டு, நகரில் முக்கிய வீதிவழியாக நடந்தது. இந்த கருட÷ சவையைத் தரிசித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ராமானுஜ தர்சன சபை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் ஆகியோர் விழா  ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர். முக்கிய வீதிகளில்  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar