நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலி 3ம் தேதி தீமிதி திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2016 11:06
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் நாளை 3ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது. கடலுார் அடுத்த நடுவீரப்பட்டு திரவுபதி யம்மன் கோவிலில் வரும் 3ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது. கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. கடந்த 29ம் தேதி திரவுபதியம்மனுக்கும் அர்ச்சுனனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. வரும் 3ம் தேதி காலை 8:00 மணிக்கு விநாயகர், திரவுபதியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து 12:00 மணிக்கு அரவான் வீதியுலா நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. 4ம் தேதி 3:00 மணிக்கு சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும் நடக்கிறது.