Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகிமாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ... கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொருக்கை சிவன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2011
12:09

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை சிவகாமி உடனுறை வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடந்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கையில் வீரட்டேஸ்வரர் கோவில், 11ம் நூற்றாண்டில் சோழர்களாலும், 13ம் நூற்றாண்டில் பாண்டியர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்ட, 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்தலமாகும். ராஜகோபுரத்துடன் விளங்கிய இக்கோவில் சிதிலமடைந்ததால், பக்தர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த சில மாதம் முன் திருப்பணிகள் செய்யப்பட்டன. கடந்த 6ம் தேதி, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கி, புனித நீர் அடங்கிய கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, காலை 10.45 மணிக்கு சிவாச்சாரியாõர்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கும்பங்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர். 11.30 மணியளவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகமும், தொடர்ந்து ஸ்வாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா அபிஷேகமும் நடந்தது. யாகசாலை பூஜைகளை சிவாச்சாரியார்கள் வெங்டேஷ் ஈசான சிவம், பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் இளங்கோ, உதவி ஆணையர் சிவராம் ராம்குமார், தக்கார் நீதிமணி, யூனியன் கவுன்சிலர் சிங்காரவேல் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில் போலீஸார் மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar