Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீரடி சாயி பாபா பூஜை மந்திரங்கள்! சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 2 சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் ...
முதல் பக்கம் » சீரடி சாயி பாபா வழிபாடு
சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 1
எழுத்தின் அளவு:
சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 1

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2016
02:06

ஆரத்தி - ஒரு அறிமுகம்

ஆரத்தி என்றால் தமிழ் நாட்டில் புதுமணத் தம்பதிகளை வரவேற்க, போட்டிகளில்  வெற்றி பெற்று திரும்புவர்களை வரவேற்க, ஒரு பூசை, பிறந்த நாள், யாகம் முடிவடைந்தவுடன், அதை  நடத்திய எஜமானருக்கு காட்ட, மங்கல நிகழ்ச்சிகளில் ஒரு மந்திரி, பெரிய மனிதர்கள் ஆகியோர் வருகையின் போது பெண்கள் தட்டில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீர் ஊற்றி, விளக்கு வைத்தோ, வைக்காமலோ காட்டப்படுவது. ஆனால் வட நாட்டில் எல்லாக் கோவில்களிலும் அல்லது ஞானியர் மற்றும் துறவிகளின் உருவச்சிலைமுன், தினமும் காலை, நண்பகல், மாலை மற்றும் இரவு நேரங்களில் காட்டப்படும் ஐந்துமுக நெய்த்திரியிட்ட தீபாராதனை, ஆரத்தி எனப்படும். பண்டரிபுரம், அக்கல்கோட், ஷேகாவ் போன்ற இடங்களில் பாண்டுரங்கவிட்டல், அக்கல்கோட் மகாராஜ், கஜானன் மகாராஜ் ஆகியோருக்கும் ஆரத்திகள் காட்டப்படுகின்றன. அது மட்டுமல்ல ஹரித்துவார், காசியில் கங்கை நதிக்கும் மாலை வேளையில் தினமும் ஆரத்தி காட்டப்படுகிறது. நாம் தீபாராதனை என்பதை அவர்கள் ஆரத்தி என்று பெயரிட்டழைக்கிறார்கள்.

இன்று உலகெங்கிலும் உள்ள சீரடி சாயி பாபா, கோவில்களிலும், சீரடியில் சமாதி மந்திரில் பாபாவின் ஆளுயர வெண்பளிங்குக் சிலைக்கு முன்பும், தினமும் நான்கு வேளைகள் ஆரத்தி காட்டப்படுகிறது. ஆரத்தியின் போது பாடப்படும் பாடல்கள் இனிமையானவை, மனத்தை மயக்குபவை, மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் தருபவை. பொருள் வளம் கொண்டவை.

இறைவனுக்கு வழங்கப்படும் எட்டு வித அல்லது பதினாறு வகை பூசை முறைகளில் ஆரத்திக்கு இடமில்லை. எனவே எப்பொழுது இந்த ஆரத்தி காட்டும் முறை ஆரம்பித்தது என்று யாருக்கும் தெரியாது. பூசைகள் முடிந்தவுடன் காட்டப்படும் குடைகாட்டுதல், சாமரம் வீசுதல், கண்ணாடிகாட்டுதல், பாடல்கள், நடனம், வாத்ய இசை, வேதகோஷம், திருமுறை ஓதுதல் ஆகியவற்றிலும் கூட ஆரத்தி இடம் பெற்று இருக்கவில்லை. எனவே இது இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட ஒன்று எனக் கூறலாம். 1909ம் ஆண்டு தான் முதன்முதலாக, பாபாவின் முன்பு மக்கள் ஒன்றாகக் கூடி நின்று, அவரை நேரில் நின்று வழிபடும் முறை ஏற்பட்டது. முதலில் நண்பகல் ஆரத்தி மட்டும் காட்டப்பட்டது. 1909ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 தேதி சாவடி ஊர்வலம் ஆரம்பித்தவுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேஷ் ஆரத்தி எனப்படும் இரவு ஆரத்தி காட்டும் வழக்கம் ஆரம்பித்தது. துவாரகாமாயிக்குச் செல்லும் முன் சாவடியிலேயே காலை ஆரத்தியும் (காகட ஆரத்தி) ஆரம்பிக்கப்பட்டது. வெகு காலத்திற்கு பிறகே தூப்ஆரத்தி எனப்படும் சூரியன் மேற்கு திசையில் மறையும் நேரம் மாலையில் ஆரத்தி காட்டுவது ஆரம்பித்தது.

பாபா தனக்கு ஆரத்தி காட்டப்படுவதை முதலில் விரும்பவில்லை அனுமதிக்கவுமில்லை. பக்தர்களின் இடைவிடாத வற்புறுத்தலின் காரணமாக தனக்கு ஆரத்தி காட்ட, பிறகு சம்மதித்தார். முதன் முதலாக நூல்கர் (இவர் பண்டரிபுரத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்) என்பவரை ஆரத்தி காட்ட அனுமதித்தார். அவர் மறைவிற்குப் பிறகு. மேகா என்னும் சிவ பக்தன் பாபாவிற்கு ஆரத்தி காட்ட ஆரம்பித்தார். பாபாவை சிவனாக கருதி வழிபட்டவர். இவர் ஆரத்தி காட்டும் பொழுது பாபாவை நோக்கி ஒற்றைக்காலில் நின்று கொண்டு தலையை இங்கும் அங்கும் அசைக்காமல் ஆரத்தி காட்டுவாராம். பாபா நேசித்த பக்தர்களில் ஒருவர். 1912ம் ஆண்டு மேகா மறைந்த நேரம் பாபா கண்ணீர் விட்டு அழுதார். அவன் உடலை தடவிக் கொடுத்து அவனது பிரேத ஊர்வலத்தில் சிறிது தூரம் கூடவே சென்றாராம். மேகாவின் மறைவிற்கு பிறகு பாபு சாகேப் ஜோக் (ஒOஎ)என்பவர் பாபாவிற்கு ஆரத்திகாட்ட அனுமதிக்கப்பட்டார். பாபா சமாதியடையும் வரை இவரே அந்தப் பணியைச் செய்தார்.

சாயி பாபாவிடம் ஆன்மீக பலனுக்கு மட்டுமே வந்து, அவ்வாறு பலனும் பெற்றவர்களில் திரு ஜோகேஷவர்  பீமா முக்கியமானவர். 1911 ம் ஆண்டு முதன் முதலாக சீரடிக்கு வந்து பாபாவின் கமல பாதங்களில் சரணடைந்தார். பாபாவின் ஆசிகளுடன், அவர் அனுமதியுடன் ஐந்து ஆரத்தி பாடல்களை இயற்றினார். பீஷ்மா எல்லா ஆரத்தி பாடல்களையும் ஒழுங்குபடுத்தி அமைத்து காலை, நண்பகல், மாலை, இரவு வேளைகளில் அந்தந்த வேளைகளுக்கு ஏற்றவாறு பாடுவதற்காக அவற்றிற்கு ஒரு வடிவம் கொடுத்து ஸ்ரீ சாயி சகுணோ பாசனா என்ற ஆரத்தி பாட்டு புத்தகத்தை உருவாக்கினார். அதன் படியே இன்று ஆரத்தி பாடல்கள் அந்தந்த வேளைகளில் பாடப்படுகிறது. சீரடி சாயி பாபா ஆரத்தியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. இதில் 16 பாபாவை போற்றி பாடப்பட்டவை. மீதி 14 பாடல்கள் மகாராஷ்ட்ர மாநிலத்தில் எல்லா இடங்களிலும் பாடப்படும் பக்திப்பாடல்கள். இவை பண்டரிபுரத்தில் உறையும் தெய்வம் பாண்டுரங்களின் அடியவர்களால் இயற்றப்பட்டவை. உதாரணமாக ஞானி துகாராமின் 5 பாடல்கள், நாமதேவர் 2 பாடல்கள், ஜனாபாய் என்ற பக்தையின் 2 பாடல்கள், ராம ஜனார்த்தனஸ்வாமியின் ஒரு பாடல். மீதியுள்ளவற்றில் ஒன்று வேதத்திலிருந்தும், புருஷசூக்தத்திலிருந்தும், மந்த்ரபுஷ்பம், மற்றும் 3 மகாராஷ்ட்ர மக்களால் வழக்கமாக பாடப்படுபவை.

பாபாவைப் போற்றிபாடும் பாடல்கள் 16ல் ஒன்பது பாடல்கள் பீஷ்மாவினாலும் மூன்று தாஸ்கணு மகாராஜாலும். இயற்றப்பட்டவை. இந்தப் பன்னிரெண்டு (9+3) போக மீதமுள்ள 4 பாடல்களும் பாபாவுடன் கூடப் பழகிய ஸ்ரீ உபாசினி மகாராஜ், ஸ்ரீமாதவ அட்கர், ஸ்ரீமோஹினி ராஜ், ஸ்ரீ பி.வி. தேவ் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் இயற்றினார்கள். 1905ம் ஆண்டே மாதவ் அட்கர் என்ற பக்தர் பாபாவை குறித்து ஆரத்தி சாயி பாபா என்ற அற்புதமான பாடலை இயற்றினார். பாபா இந்தப் பாடலை, உதிபாக்கெட்டுடன் நானாசந்தோர்கரின் மகள் மினாத்தாய் பிரசவவலியால் துடித்து கொண்டிருந்த பொழுது சுகப்பிரசவத்திற்காக ராம்கீர்புவா என்பவர் மூலம் கொடுத்தனுப்பினார். பாபாவின் உள்ளம் கவர்ந்த, அவரது ஆசி பெற்றபாடல் ஆரத்தி சாயி பாபா என்று ஆரம்பிக்கும் பாடல். மொத்தமுள்ள 30 பாடல்களில் 25 மராத்தி மொழியிலும், 2 இந்தியிலும், 2 வட மொழியான சமஸ்க்குதத்திலும் மற்றொன்று இந்தியும் சம்ஸ்க்குதமும் கலந்தது. தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும் சீரடி சாயி பாபாவின் பக்தர்கள் இந்த ஆரத்திப் பாடல்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பும் வரிக்குவரி கொடுக்கப்பட்டுள்ளது. வேற்று மொழி பாடல்களை அவற்றின் அர்த்தம் தெரிந்து பாடினால் அவற்றின் மீது ஒரு ஈடுபாடுவரும், இந்தக் காரணங்களுக்காகவே ஒவ்வொரு பாடலின் அர்த்தத்தையும் வரிக்கு வரி கொடுத்துள்ளோம்.

சீரடி பாபாவின் ஆரத்தி பாடல்கள் நாட்டுப்புற மெட்டுக்களில், எளிய நடையில், இனிமையான இசையில் அமைக்கப்பட்டுள்ளன. பாமரமக்களும் உணர்வு பூர்வமாக ஒன்றிப் பாடும் வகையில் அமைந்துள்ள இந்த இனிமையான பாடல்கள் மனத்திற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுப்பது மட்டுமின்றி மக்களின் ஆன்மீக உணர்வினை தூண்டுவதாகவும், சீரடி பாபாவுடன்  உணர்வு பூர்வமாக ஒன்றிடவும் உதவுகின்றன.

காகட ஆரதி (காலை)

1.) ஜோடுநியா கர சரணீ டேவிலா மாதா
பரிஸாவீ வினந்தீ மாஜீ ஸத்குருநாதா

2.) அஸோ நஸோ பாவ ஆலோ துஜியா டாயா
க்ருபாத்ருஷ்டீ பாஹே மஜகடே ஸத்குருராயா

3.) அகண்டித அஸாவே ஐஸே வாடதே பாயீ
ஸாண்டூநீ ஸங்கோச பாவ தோடாஸா தேயீ

4.) துகா ம்ஹணே தேவா மாஜீ லேடீவாங்குடீ
நாமே பவபாச ஹாதீ ஆபுல்யா தோடீ

(2)

5.) உடா பாண்டுரங்கா ஆதா. ப்ரபாதஸமயோ பாதலா
வைஷ்ணவாஞ்சா மேளா கருடபாரீ தாடலா

6.) கரூடபாராபாஸூநீ மஹாத்வாரா பர்யந்த
ஸுரவராஞ்சீ மாந்தீ உபீ ஜோடூநியா ஹாத

7. சுகஸநகாதிக நாரததும்பர பக்தான்ச்யா கோடீ
த்ரிசூல டமரூ கேஉனி உபா கிரிஜேசா பதீ

காகட் ஆரத்தி -  ஆரத்தி காலை 4.30 மணிக்கு

1.) கைகளை ஒன்றாக குவித்து வணங்கி, உனது பாதங்களில் தலையை வைத்தேன். எனது வேண்டுகோளை கேளுங்கள். சத்குருநாதா!

2.) பக்தியுடனோ, பக்தி இல்லாமலோ உன் கோவிலுக்கு வந்திருக்கிறேன். உன் கருணை மிக்க பார்வையை என்மீது காட்டுங்கள் சத்குருநாதா!

3.) உமது பாதங்களே என்ஒரே அடைக்கலம் என்ற எண்ணம் என்னுள் என்றும் தொடரட்டும். உமது கருணையைக் காட்டி எனக்கு அருள் புரியுங்கள்.

4.) நான் பிதற்றிக் கொண்டிருக்கும் நாம செபத்தைக் கேட்டு, உலக வாழ்க்கையில் எனக்குள்ள பற்றை அழியுங்கள் என்று துகாராம் வேண்டுகிறார்.

(2)

5.) ஓ! பாண்டுரங்கா! எழுந்திரு. இப்பொழுது பொழுது புலர்ந்து விடிகாலை வேளை வந்துவிட்டது. வைஷ்ணவ மக்களின் கூட்டம் கருட ஸ்தம்பம் வரை வந்துவிட்டது.

6.) கருட ஸ்தம்பம் முதல் வெளி வாசல் வரை தேவர்களின் கூட்டம் இருகை கூப்பிய வண்ணம் நிற்கிறது.

7.) பக்தர்களின் பெருங்கூட்டத்திற்கு நடுவில் சுகர், சனகர், நாரதர், தும்புரு, ஆகியோருடன் திரிசூலம், டமரு ஏந்தி கிரிஜாதிபதி சிவபெருமான் நின்றுள்ளார்.

8.) கலீயுகீசா பக்த நாமா உபா கிர்தனீ
பாடீமாகே உபீ டோளா லாவூநியா ஜனீ

(3)

9.) உடா உடா ஸ்ரீஸாயீநாத குரு சரணகமல தாவா
ஆதிவ்யாதி பவதாப வாருநீ தாரா ஜடஜீவா

10.) கேலீ தும்ஹாம் ஸோடுநியா பவதமரஜனீ விலயா
பரி ஹீ அக்ஞானாஸீ துமசீ புலவி யோகமாயா
சக்தி ந ஆம்ஹாம் யத்கிஞ்சிதஹீ திஜலா ஸாராயா

11.) தும்ஹீச தீதே ஸாருனி தாவா முக ஜன தாராயாபோ
ஸாயீநாத மஹாராஜ பவ - திமிர - நாசக ரவீ

12. அக்ஞானீ ஆம்ஹீ கிதீ தும்ஹீச தவ வர்ணாவி தோரவீ
தீ வர்ணிதா பாகலே பஹுவதனி சேஷ விதி கவீ
ஸக்ருப ஹோஉனி மஹிமா துமசா தும்ஹீச வதவாவா
(ஆதி- வ்யாதி.. உடா உடா ஸ்ரீஸாயிநாத)

(4)

பக்த மனீ ஸத்பாவ தருநி ஜே தும்ஹாம் அனுஸரலே
த்யாயாஸ்தவ தே தர்சன துமசே த்வாரி உபே டேலே
த்யானஸ்தா தும்ஹாம்ஸ பாஹூநீ மன அமுசே தாலே
பரி த்வத்வசனாம்ருத ப்ராசாயாதே ஆதுர ஜாலே

8.) கலியுகத்து பக்தரான நாம தேவர் நின்று கொண்டு பக்திப்பாடல்
களைப்பாடுகிறார். அவர் பின்னால் ஜனாபாய் தன் கண்களை
மூடியபடி நிற்கிறாள். தீவிரமாக உம்மைதியானம் செய்தவாறு.

(3)

9.) திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீசாயி நாத குருவே. உனது தாமரைப் பாதங்களைப் காட்டுவாய். துயரங்கள், வியாதிகள், சம்சாரத் துன்பம் ஆகியவற்றை நீக்கி ஜடங்களான எம்மை காத்தருள்வாய்!

10.) பிறவிக்கடல் என்ற இருட்டு உங்களை விட்டு அகன்று விட்டது. உமது யோகமாயை இந்த அஞ்ஞானியை மோஹத்தில் (ஆசை) ஆழ்த்துகிறது. அந்த மோஹத்தைத் தள்ளி விடும் சக்தி எங்களிடமில்லை.

11.) நீங்களே அந்த மாயையை நீக்கி விட்டு உமது முகதரிசனத்தைக் காட்டுங்கள். ஓ! சாயி நாதரே சம்சாரமே என்னும் இருட்டை நீக்கும் சூரியனே.

12.) அஞ்ஞானியான நாங்கள் உங்களது பெருமையை வார்த்தைகளால் எப்படி வர்ணிக்க முடியும்? உங்களை வர்ணிக்க முயன்ற ஆதிசேஷனும், பிரம்மாவும் கூட முடியாமல் களைத்துப் போயினர். உமது பெருமைகளை கூறத் தேவையான  திறமையை நீரே கருணைகூர்ந்து எங்களுக்கு அருள்வீர்.

(4)

13) நம்பிக்கையுள்ள பக்தர்கள் யாவரும் அன்புததும்பவாசலில் நிற்கின்றனர். அவர்களுக்கு உங்கள் தரிசனத்தைக்காட்டு, தியானித்தில் இருக்கும் உங்களைப் பார்த்து எங்கள் மனங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தது, திருப்தி அடைந்தது அதே சமயம் உமது அமுதமயமான வார்த்தைகளை கேட்க ஆசை வந்துவிட்டது.

உகடூநீ நேத்ரகமலா தீனபந்து ரமாகாந்தா
பாஹீ பா க்ருபாத்ருஷ்டீ பாலகா ஜஸீ மாதா

ரஞ்ஜவீ மதுரவாணீ ஹரீதாப ஸாயீநாதா
ஆம்ஹீச அபுலே காஜாஸ்தவ துஜ கஷ்டவிதோ தேவா
ஸஹன கரிசில தே ஜகுநி த்யாவீ பேட க்ருஷ்ண தாவா
(உடா உடா..ஆதி-வ்யாதி)

(5)

1.) உடா பாண்டுரங்கா ஆதா தர்சன த்யா ஸகளாம்
ஜாலா அருணோதய ஸரலீ நித்ரேசீ வேளா

2.) ஸந்த ஸாது முனீ அவகே ஜாலேதீ கோளா
ஸோடா சேஜே ஸுகே ஆதா பகு த்யா முககமளா

3.) ரங்கமண்டலீ மஹாத்வாரீ ஜாலீஸே தாடீ
மன உதாவீள ரூப பஹாவயா த்ருஷ்டீ

4.) ராஹீ ரகுமாபாயீ தும்ஹாம் யேஊ த்யா தயா
சேஜே ஹாலவுநீ ஜாகே கரா தேவராயா

5.) கருட ஹனுமந்த உபே பஹாதீ வாட:
ஸ்வர்கீசே ஸுரவர கேஉனி ஆலே போபாட

14.) எளியோர்களின் உறவினரானவனே! (தீனபந்து), ரமாகாந்தா! (மகாலட்சுமியின் கணவரே) உன் தாமரை மலரை யொத்த உன் கண்களைத் திறந்து, தாய் தன் குழந்தையை நோக்கும் அதே பார்வையைப் போல் எங்களை கருணையுடன் நோக்குவாயாக.

15. இனிய வார்த்தைகள் கூறி எங்கள் தாபங்களை நீக்குங்கள். சாயி நாதா! எங்கள் கஷ்டங்களை கூறி உங்களைக் கஷ்டப்படுத்துகிறோம் மன்னித்துவிடுங்கள் உங்கள் தரிசனத்தைத் தாருங்கள். எங்கள் சம்சாரதுக்-க வியாதியை நீக்குங்கள். காத்தருளுங்கள் இதுவே க்ருஷ்ணாவின் (கிருஷ்ணாவிற்கு பதில் நீங்கள் பெயர்களை கூறிக்கொள்ளவும்)பிரார்த்தனை.

(5)

16.) ஓ! பாண்டுரங்கா! எழுவாய்! இப்போது எல்லோருக்கும் உன் தரிசனம் தருவாய்! தூங்கும் நேரம் முடிந்துவிட்டது. இரவின் இருட்டு நீங்கி சூரியன் உதயமாயிற்று.

17.) சாதுக்கள், மஹான்கள், முனிவர்கள் அனைவரும் இங்கு வந்திருக்கிறார்கள் சுகமான, உறக்கத்தினின்று எழுந்து உன் தாமரை முக தரிசனம் தருவாய்!

18.) ரங்கமண்டப மசூதி வாசல் வரை பக்தர்கள் கூடியுள்ளனர். உங்கள் உருவத்தைக் காண இதயங்களில் ஆவலுடன் காத்து ஒவ்வொருவரும் நிற்கிறார்கள்.

19.) (ராதா)ராகி (ருக்மணி) ரகுமாயித்தாயே! கருனண கூர்ந்து படுக்கையை சிறிது அசை, அது! தேவராயனை  தூக்கத்திலிருந்து விழிக்கச் செய்யும்.

20.) கருடனும் ஹனுமாரும் உங்களை துதித்தவாறு நிற்கிறார்கள். சொர்கத்திலிருந்த தேவர்களை அழைத்து வந்துள்ளார்கள். அவர்களும் உங்கள் பெருமைகளால் போற்றி பாடுகிறார்கள்.

6.) ஜாலே முக்த த்வார லாப ஜாலா ரோகடா
விஷ்ணுதாஸ நாமா உபா கேவூனி காகடா

(6)

1.) கேஉநியா பஞ்சாரதீ, கரூ பாபாம்ஸீ ஆரதீ
கரூ ஸாயீஸீ ஆரதீ, கரூ பாபாம்ஸீ ஆரதீ

2.) உடா உடா ஹோ பாந்தவ, ஓவாளூ ஹா ரமாமாதவ
ஸாயி ரமாதவ, ஓவாளூ ஹா ரமாதவ

3.) கரூநியா ஸ்தீர மன, பாஹூ கம்பீர ஹே த்யான
ஸாயீசே ஹே த்யான, பாஹூ கம்பீர ஹே த்யான

4.) க்ருஷ்ணநாதா தத்தஸாயீ, ஜடோ சித்த துஜே பாயீ
சித்த தேவா பாயீ, ஜடோ சித்த துஜே பாயீ

5.) காகட ஆரதீ கரீதோ ஸாயீநாத தேவா
சின்மயரூப தாகவீ கேவுனி பாலக - லகுஸேவா

6.) காம க்ரோத மத மத்ஸர ஆடுநீ காகடா கேலா
வைராக்யாசே தூப காலுநி மீ தோ பீஜவீலா
ஸாயீ நாத குருபக்தி ஜ்வலனே தோ மீ பேடவிலா
தத்வ்ருத்தீ ஜாளுநீ குருனே ப்ரகாச பாடிலா
த்வைத - தமா நாஸூநீ மிளவீ தத்ஸ்வரூபீ ஜீவா

(சின்மய... காகட.. சின்மய)

21) பள்ளியறை கதவு திறக்கப்பட்டு உங்கள் தரிசனத்தால் பேரானந்தம் எமக்கு கிடைத்தது. விஷ்ணுதாசன் நாமதேவர் காகட் ஆரத்தியை தன் கைகளில் ஏந்தி நிற்கின்றன.

(6)

1.) பாபாவிற்கு ஐந்து முக தீப ஆரத்தியை காட்டுகிறேன். சாயிக்கு ஆரத்தி காட்டுகிறேன்.

2.) உறவினர்களே! எழுந்திருங்கள், எழுந்திருங்கள் ரமாகாந்தனுக்கு ஆரத்தி எடுப்போம். சாயிக்கு ஆரத்தி எடுப்போம்.

3.) ஒரு நிலைப்பட்ட மனத்தோடு தியானம் செய்யும் உருவத்தை காண்போம் தியானம் செய்யும் சாயி நாதரின் உருவம் தரிசனம் கிடைக்கட்டும்.

4.) கிருஷ்ண நாத தத்த சாயி உறுதியான மனதுடன் உங்களைப் பணிந்தோம். எங்கள் மனம் உனது பாத கமலங்களில் பற்று கொள்ளட்டும்.

5.) ஓ! சாயி நாதா! உமக்கு விடியற்காலை (காகட்) ஆரத்தி காட்டுகிறேன். சிறுவர்களான எங்களது இந்த எளிய சேவையை ஏற்றுக்கொண்டு உனது சின்மயமான (ஆனந்த) உருவத்தைக் காட்டு, உங்கள் பரிசுத்தமான அறிவுகூர்ந்த மனதை மயக்கும் உருவத்தைக் காட்டுங்கள்.

6. ஆசை, மோகம், வெறுப்பு, பொறாமை, மதம் ஆகியவற்றை திரியாகச் செய்து, வைராக்யம் என்னும் நெய்யை ஊற்றி சாயிநாத குருவின் மீது பக்தி என்ற நெருப்பினால் அந்தத் திரியை ஏற்றினேன் அதை எரியச் செய்து அவர் என் துர்க்குணங்களை எரித்திடு வார். இரண்டு என்ற பேதத்தை நீக்கி உயிர்களுக்கு தன்னை அறியும் (ஆத்மஞானம்) அறிவை கொடுப்பார், குரு.

7.) பூ-கேசர வ்யாபூநீ அவகே ஹ்ருத்கமலீ ராஹஸீ
தோசி தத்ததேவ தூ சீரடி ராஹுநி பாவஸீ
ராஹுநி யேதே அன்யத்ரஹி தூ பக்தான்ஸ்தவ தாவஸீ
நிரஸுநியா ஸங்கடா தாஸா அனுபவ தாவிஸீ
ந களே த்வல் - லீலாஹீ கோண்யா தேவா வா மானவா!
(சின்மய ... காகட... சின்மய)

8.) த்வத்யச துந்துபீநே ஸாரே அம்பர ஹே கோந்தலே!
சகுண மூர்தி பாஹண்யா ஆதுர ஜன சீரடீ ஆலே!
ப்ராஸுநி த்வத்வசனாம்ருத ஆமுசே தேஹபாந ஹரபலே
ஸோடூநியா துரபிமான மானஸ த்வச்சரணீ வாஹிலே
க்ருபா கரூநியா ஸாயீமாஉலே தாஸ பதரீ த்யாவா
(சின்மய... காகட ... சின்மய)

7.) காகட ஆரதீ

பக்திசியா போடீ போத காகடா ஜ்யோதீ
பஞ்சப்ராண ஜீவே பாவே ஓவாளு ஆரதீ

2. ஓவாளூ ஆரதி மாஜ்யா பண்டரீநாதா, மாஜ்யா ஸாயீநாதா
தோன்ஹீ கர ஜோடுநீ சரணீ டேவிலா மாதா.

7.) பூமி, ஆகாயம் முழுவதும் பரவி எல்லா உயிரனங்களின் உள்ளும் இருப்பவரே! அந்த தத்தாத்ரேயரே! நீ சீரடியில் வந்து தங்கி இருக்கிறாய். இங்கு நீங்கள் இருப்பதோடு மட்டுமின்றி அதே நேரத்தில் உங்கள் பக்தர்களுக்காக மற்ற இடங்களுக்கும் செல்கிறீர்கள் அவர்களின் துன்பங்கள் அனைத்தையும் ஒரு துளிகூட மிச்சமின்றி துடைத்துவிட்டு உங்கள் அனுபவங்களை அவர்களுக்கு அளிக்கிறீர்கள். கடவுளரோ, மனிதர்களோ உங்கள் தெய்வீக விளையாட்டை புரிந்து கொள்ளவே முடியாது. அடியவர்களின் (தாஸர்களின்) துன்பங்களை நீக்கி அவர்களுக்கு சுகமான அனுபவங்களை அளிக்கிறாய். கலி காலமாகிய இப்போது உன்னைப் போன்ற மனிதரோ, தெய்வமோ வேறு எவருமில்லை.

8.) பக்தர்கள் உன்னைப் புகழந்து பாடும் உன் புகழ், துந்துபி என்ற வாத்யத்தின் ஓசையைப் போல் உலகம் முழுவதும் நிறைந்துள்ளது. உருவமெடுத்து வந்தபரப் பிரம்மமான சாயியைக் காண ஆவலோடு மக்கள் சீரடிக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். உனது முகத்தினின்றும் வெளிப்படும் அமுதத்திற்கு ஈடான மொழிகளைக் கேட்டு எங்களையே மறந்தோம். எங்கள் மனங்களில் உள்ள பாவ எண்ணங்கள் பறந்தோடின. உன் பாத கமலங்களை சரணடைந்தோம் சாயி நாதா! தயை கூர்ந்து எனக்கு அடைக்கலம் அளிக்க வேண்டுகிறேன்.

(7)

1.)  பக்தி நிறைந்த மனத்துடன் விடியற்காலை வேளையில் சோதியைப் பார்க்கிறேன். என் ஐந்து பிராணன்களுடன் கூடிய ஜீவனால் பஞ்ச முக ஆரத்தி காட்டுகிறேன்.

2.) என் பண்டரிநாதா, சாயிநாதா உமக்கு ஆரத்தி காட்டுகிறேன். இரண்டு கைகளையும் ஒன்றாகக் குவித்து உன் பாதங்களில் என் தலையை வைத்து வணங்குகிறேன். உன் அழகை

காய மஹிமா வர்ணூ ஆதா ஸாங்கணே கிதீ
கோடீ ப்ரஹ்மஹத்யா முக பாஹதா ஜாதீ

3.) ராஹீ ரகுமாபாயீ உப்யா தோகீ தோ பாஹீ
மயூரபிச்ச சாமரே டாளிதி டாயீசே டாயீ

4.) துகா ம்ஹணே தீப கேவுனி உன்மநீத சோபா
விடேவரீ உபா திஸே லாவண்ய காபா (ஓவாளூ)

(8) உடா உடா (பதம்)

1. உடா ஸாதுஸந்த ஸாதா ஆபுலாலே ஹித
ஜாயீல ஜாயீல ஹா நரதேஹ மக கைஞ்சா பகவந்த

2. உடோநியா பஹாடே பாபா உபா அஸே விடே
சரண த்யாஞ்சே கோமடே அம்ருதத்ருஷ்டீ அவலோகா

3. உடா உடா ஹோ வேகேஸீ சலா ஜாவூயா ராவுளாஸீ
ஜளதில பாதகாஞ்ச்யா ராஸீ காகட ஆரதீ தேகிலியா

4. ஜாகே கரா ருக்மிணீவர தேவ ஆஹே நிஜஸுராந்த
வேகே லிம்பலோண கரா த்ருஷ்ட ஹோயீல தயாஸீ

எவ்வாறு வர்ணிப்பது? வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத. உன் முகத்தை பார்த்தவுடனே கோடிக்கணக்கான பிரம்மஹத்தி பாபங்களும் நீங்கிவிடும்.

3.) ராகியும் (ராதா) ரகுமாயியும் (ருக்மணி) உன் இரண்டு பக்கங்களில் நின்று கொண்டு மயிலிறகுகளாலான சாமரங்களை வீசுகின்றனர்.

4.) துகாராம் காட்டும் தீப ஆரத்தியின் ஒளியில் சாயிநாதர் பளபளவென்று ஒளியுடன் கூட காட்சி தருகிறார். அழகே உருவான சாயி நாதருக்கு ஆரத்தி காட்டுகிறோம்.

(8)

1.) ஓ! சாதுக்களே! மகான்களே! எழுந்திருங்கள். உங்கள் சொந்த நலன்களை பெறுங்கள். இந்த மனித உடல் போனபின் கடவுளை பணிவது முடியாத ஒன்று. ஏனென்றால் இந்த மனித உடல் கணந்தோறும் அழிந்து கொண்டிருக்கிறது.

2.) விடியற்காலை வேளையில் செங்கல்லின் மேல் நிற்கும் செம்மல் விட்டல் பாபாவின் அழகிய பாதங்களை பணியுங்கள். அமுதமயமான அவரது அருட்பார்வையை பாடுங்கள்.

3.) எழுந்திருங்கள். எழுந்திருங்கள் விரைவாக கோவிலுக்குச் செல்வோம். காலை ஆரத்தியை (காகட ஆரத்தி) காண்பதால் நம் பாவக் குவியல்கள் கரைந்தோடிவிடும்.

4.) கண்விழித்து எழுந்திரும் ருக்மணியின் கணவரே. அழகிய தோற்றம் கொண்டவரே. கண் திருஷ்டி உமக்கு ஏற்படாமலிருக்க எலுமிச்சம் பழம், உப்புடன் திருஷ்டிகழிக்க அனுமதிகொடு, இல்லாவிட்டால் கஷ்டப்படுவாய்.

5.) தாரீ வாஜந்த்ரீ வாஜதீ டோல தமாமே கர்ஜதீ
ஹோதே காகட ஆரதீ மாஜ்யா ஸத்குரு ராயாஞ்சீ

6.) ஸிம்ஹநாத சங்கபேரீ ஆனந்த ஹோதோ மஹாத்வாரீ
கேசவராஜ விடேவரீ நாமா சரண வந்திதோ

(9)

ஸாயிநாதகுரு மாஜே ஆயீ
மஜலா டாவ த்யாவா பாயீ
தத்தராஜ குரு மாஜே ஆயீ
மஜலா டாவ த்யாவா பாயீ

(ஸ்ரீஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத மஹராஜ் கீஜய்)

ஸ்ரீ ஸாயீநாத ப்ரபாதாஷ்டகம் (ப்ருத்வீ)

1.) ப்ரபாத ஸமயீ நபா சுப ரவிப்ரபா பாகலீ
ஸ்மரே குரு ஸதா அசா ஸமயி த்யா சலே நா கலீ
ம்ஹணோனி கர ஜோடூநீ கரு ஆதா குரு ப்ரார்த்தனா
ஸமர்த்த குரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

2.) தமா நிரஸி பானு ஹா குருஹி நாஸி அக்ஞானதா
பரந்து குருசி கரீ ந ரவிஹீ கதீ ஸாம்யதா
புன்ஹா திமிர ஜன்ம கே குரு க்ருபேனி அக்ஞானதா
ஸமர்த்தகுரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

5.) உன் கோயில் வாசலில் மங்கல வாத்யங்கள் ஒலிக்கின்றன. மத்தளங்கள் மெதுவாக ஒலிக்கின்றன. இவைகளுடன் என் குரு சத் குரு சாயியின் ஆரத்தி நடக்கின்றது.

6.) கோயில் வாசலில் சிங்கநாதம் சங்கு, பேரிகை ஆகியவற்றின் ஓசை ஆனந்தமாக ஒலிக்கின்றன. கேசவ ராஜ விட்டலின் செங்கலின் மேல் நிற்கும் பாதங்களை நாம் பக்தியுடன் வணங்கிடுவோம்.

(9)

1.) சாயிநாத் குருவே என்தாய். உங்கள் பாதங்களில் எனக்கு இடம் கொடுங்கள் தத்தராசரே! குருவே! தாயே! உங்கள் பாதங்களில் எனக்கு அடைக்கலம் கொடுங்கள்.

ஸ்ரீஸாயீநாத ப்ரபாதாஷ்டகம் (ப்ருத்வீ)

1.) விடியற்காலை வேளையில் சூரியன் தன் ஒளிதரும் கிரணங்களால் ஒளி வீசி உலகுக்கு நலம் செய்கிறான். இந்நேரத்தில் எப்பொழுதும் சத்குருவை தியானம் செய்யும் நம்மை கலி ஒன்றும் செய்யமாட்டான். உலகப் பற்றுகள் யாவும் நீங்க சமர்த்த குரு சாயிநாதரை ஆகையால் வேண்டுவோம். குவித்த கரங்களுடன் சமர்த்த சத்குரு சாயிநாதர் நம் ஆசைகளை நிறைவேற்றட்டும்.

2.) சூரியன் இருட்டினை போக்குவதுபோல் குருவும் அஞ்ஞான இருளை அழிக்கிறார். கோடி சூரியன் ஒளிபோன்று குருநாதர் பிரகாசிக்கிறார். குருவை சூரியனோடு ஒப்பிட முடியாது. சூரியன் மறைந்தால் மீண்டும் இருட்டுவரும். ஆனால் குருவின் அருளால் ஒழிந்த அஞ்ஞானம் என்னும் இருட்டு மீண்டும் வராது. உலகப்பற்றுகள்யாவும் நீங்க சமர்த்குரு சாயிநாதரை வேண்டுவோம்.

3.) ரவி ப்ரகட ஹோவுனி த்வரித காலவீ ஆலஸா
தஸா குரூஹி ஸோடவீ ஸகல துஷ்க்ருதி லாலஸா
ஹரோநி அபிமானஹீ ஜடவி தத்பதீ பாவனா
ஸமர்த்தகுரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

4.) குருஸி உபமா திஸே விதி - ஹரீ - ஹராஞ்சீ உணீ
குடோனி மக யேயீ தீ கவநி யா உகீ பாஹுணீ
துஜீச உபமா துலா பரவி சோபதே ஸஜ்ஜனா
ஸமர்த்த குரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

5.) ஸமாதி உதரோநியா குரு சலா மஸீதீகடே
த்வதீய வசனோக்தி தீ மதுர வாரிதீ ஸாங்கடே
அஜாதரிபு ஸத்குரோ அகிலபாதகா பஞ்ஜனா
ஸமர்த்த குரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

6.) அஹா ஸுஸமயாஸி யா குரு உடோநியா பைஸலே
விலோகுனி பதாச்ரிதா ததிய ஆபதே நாஸிலே
அஸா ஸுஹிதகாரி யா ஜகதி கோணீஹீ அன்ய நா
ஸமர்த்த குரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

7.) அஸே பஹுத சஹணா பரி ந ஜ்யா குருசி க்ருபா
ந தத்ஸ்வஹித த்யா களே கரிதஸே ரிகாம்யா கபா

3.) சூரியன் உதித்து சோம்பலை நீக்குகிறார். அது போல குருவும் நமது எல்லாவித துர்க்குணங்களையும் நீக்குகிறார்.  நம் கர்வத்தை நீக்கி, நம் மனதை பக்தியில் என்றும் நிலை நிறுத்துகிறார். உலக பற்றுகள் யாவும் நீங்க சமர்த்த குரு சாயி நாதரை வேண்டுவோம்.

4.) பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளிலும் மேலானவர் சத்குரு நாதர். பிறகு ஏன் என் மனதில் வேண்டாத விருந்தாளிபோல் இந்த உவமை வருகிறது. நம் மன இருளை நீக்கும் சாயிநாதரே பரம் பொருள். நல்லவர்கள் உமக்கு சமமானவராக உம்மையே குறிப்பிடுகின்றனர். உலகப்பற்றுகள்யாவும் நீங்க சமர்த்தகுரு சாயிநாதரை வேண்டுவோம்.

5.) குருவே! சமாதி நிலையிலிருந்திறங்கி மசூதிக்குச் வாருங்கள். உங்கள் இனிமையான வார்த்தைகளால் எங்கள் துன்பங்களைப் போக்குங்கள், எதிரிகள் இல்லாத சத்குருவே! எங்கள் பாவங்கள் முழுவதையும் போக்குங்கள். உலகப்பற்றுகள் யாவும் நீங்க சமர்த்த குரு சாயிநாதரை வேண்டுவோம்.

6.) ஆஹா! இது மங்களகரமான நேரம். குரு சாயிநாதர் எழுந்து அமர்ந்துள்ளார். தன்பாதங்களில் அடைக்கலம் அடைந்தவர்களை, தம் அருட் பார்வையால் பார்த்து அவர்களது ஆபத்துக்ளை அழிப்பார். இவ்வாறு நமக்கு நன்மை செய்பவர்கள் இந்த உலகில் இவரை தவிர வேறு யார் இருக்கிறார்கள். உலகப் பற்றுகள் யாவும் நீங்க சமர்த்த குரு சாயிநாதரை வேண்டுவோம்.

7.) ஒருவன் எவ்வளவுதான் அறிவுடையவனாக இருந்தாலும் அவன் தனது நன்மைக்காக குருவின் அருளை நாடாவிட்டால் அவன் வாழ்வு பயனற்றுப் போய்விடும் அவன் மனதில் எது நல்லது என்பதை அவன்

ஜரீ குருபதா தரீஸுத்ருட பக்தினே தோ மனா
ஸமர்த்த குரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

8.) குரோ விநந்தீ மீ கரீ ஹ்ருதய - மந்திரீ யா பஸா
ஸமஸ்த ஜக ஹே குரு - ஸ்வருபசீ டஸோ மானஸா
கடோ ஸதத ஸத்க்ருதி மதிஹி தே ஜகத்பாவனா
ஸமர்த்த குரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

ஸத்ரக்தரா

9.) ப்ரேம யா அஷ்டகாஸீ படுநி குருவரா
ப்ரார்த்திதீ ஜே ப்ரபாதீ
த்யாஞ்சே சிதாஸி தேதோ அகில ஹருநியா
ப்ராந்தி மீ நித்ய சாந்தீ
ஐஸே ஹே ஸாயீநாதே கதுநி ஸுசவிலே
ஜேவி யா பாலகாஸீ
தேவீ த்யா க்ருஷ்ணபாயீ நமுனி ஸவிநயே
அர்பிதோ அஷ்டகாஸீ

ஸாயீ ரஹம நஜர கரனா, பச்சோங்கா பாலன கரனா
(இருமுறை)

1. ஜானா துமனே ஜகத்பஸாரா, ஸபஹீ ஜூட ஜமானா (இருமுறை) (ஸாயீ ரஹம)

2. மைம் அந்தா ஹூம் பந்தா ஆபகா, முஜகோ ப்ரபு திகலானா (இருமுறை) (ஸாயீ ரஹம)

3. தாஸகணூ கஹே அப க்யா போலூ, தக கயீ மேரீ ரஸனா (இருமுறை) (ஸாயீ ரஹம)

உணரமாட்டான். அவன் மனதில் குருவின் பாதாரவிந்தங்களில் உறுதியானபக்தி ஏற்பட்டால் சமர்த்த குரு சாயி நாதர் நம் உலகப் பற்றுகள்யாவும் நீங்க அருள்வார்.

8. என் இதயக் கோவிலில் வந்து அமர்ந்து, இந்த உலகம் முழுவதையும் குருவின் (சாயியின்) உருவமாக பார்க்கும் மனநிலையை அளிக்குமாறு குருவை வேண்டுகிறேன். உலகத்தை புனிதமாக்க வந்தவரே. எப்போதும் நற்செயல்களையே செய்யும் புத்தியை எமக்குக் கொடுங்கள். சமர்த்த குரு சாயி நாதரை உலகப் பற்றுகள்யாவும் நீங்கிட வேண்டுகிறோம்.

ஸத்ரசிக்தரா

தினமும் காலை வேளையில் யார் ஒருவர் இந்த அஷ்டகத்தை (எட்டு துதிகள்) அன்புடனும் பக்தியுடனும் குருவின் அருளை வேண்டி படிக்கிறாரோ அவரது அறியாமை (அஞ்ஞானம்) முழுவதும் நீங்கி அமைதிபெறுவார் என்று சாயி நாதர் கூறுகிறார். மேலும் அவரது சித்தத்திற்கு நிரந்தரமான சாந்தியைக் கொடுப்பேன் என்கிறார். பக்தர்கள் வேண்டும் குருவருள் என்றென்றும் முழுமையாகக் கிடைக்க ஸ்ரீகிருஷ்ணராகிய நான் பணிவுடன் அவர் பாதம் பணிந்து இந்த எட்டு துதிகளையும் சமர்ப்பிக்கிறேன்.

1. சாயி! உம் அருள் பார்வையை எங்கள் மீது காட்டி உம் குழந்தைகளாகிய எங்களைக் காப்பாற்றும். இந்த உலகம் முழுவது மாயையால் நிறைந்தது என நீங்கள் அறிவீர்கள்.

2. மாயையில் சிக்கியுள்ள அறியாமையால் சூழப்பட்ட குருவுடன் நான். எனக்கு உங்களது தரிசனத்தைத் தாரும்.

3. தாஸ்கணு கூறுகிறார்: இப்பொழுது மேலும் நான் என்ன சொல்வேன்? நாக்கில் வார்த்தைகள் வரவில்லை.

(11) ரஹம நஜர (பதம்)

1. ரஹம நஜர் கரோ, அப மோரே ஸாயீ,
தும பீன நஹீ முஜே மா- பாப்- பாயீ, ரஹம் நஜர கரோ (இருமுறை)

1. மைம் அந்தா ஹூம் பந்தா தும்மா ரா    (இருமுறை)
2. மை நா ஜானூம் அல்லா இலாஹீ    (மும்முறை)
3. காலீ ஜமானா மைம் நே கமாயா        (இருமுறை)
ஸாதீ ஆகரகா            (மும்முறை)
கியா ந கோயீ            (நஹம நஜர)    
4. அபனே மஸீதகா ஜாடூ கணூ ஹை    (இருமுறை)
மாலிக ஹமாரே            (மும்முறை)
தும் பாபா ஸாயீ            (ரஹம நஜர)

துஜ காய தேஊ ஸாவள்யா மீ காயா தரீ ஹோ
மீ துபளீ படீக நாம்யாசீ ஜன ஸ்ரீ ஹரீ     (இருமுறை)

உச்சிஷ்ட துலா தேணே ஹீ கோஷ்ட நா பரீ ஹோ
தூ ஜகந்நாத, துஜ தேஊ கஸீரே பாகரீ    (இருமுறை)

நகோ அந்த மதீய பாஹூ ஸக்யா பகவந்தா, ஸ்ரீகாந்தா
மாத்யாஹ்ன ராத்ர உலடோனி கேலீ ஹீ ஆதா, ஆண சித்தா

ஜா ஹோயீல துஜா ரே காகடா கீ ராவுளந்தரீ ஹோ     (இருமுறை)
ஆணதீல பக்த நைவேத்யஹி நானாபரீ    (இருமுறை)

பத்

1. என்றென்றும் எங்களுக்கு அருள் செய்யும் சாயி! எங்களுக்கு தாய், தந்தை, சகோதரன் சகலமும் நீயே,

2. மாயையில் சிக்கிய குருடன் நான். அல்லா இலாஹீயை நான் அறிய மாட்டேன்.

3. காலம் முழுவதையும் வீணாக கழித்து விட்டேன். இறுதிக்காலம் வரை நீங்காத நண்பனை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

3. இந்த மசூதியை பெருக்க உதவும் துடைப்பமே தாசகணூ, நீயே தலைவன் குரு சாயி பாபா. ஸ்ரீஹரியே! அபலையான நான் உனக்கு எதை உண்ணக் கொடுப்பேன். அஞ்ஞானியாகிய நான் நாமதேவரின் (நாம்யாசீ) பணிப்பெண் என்பதை நீ அறிவாய். நான் உண்ட மீதியை உமக்கு எவ்வாறு தருவேன்? ஜகந்நாதரே! இந்த எளிய ரொட்டியை உமக்கு கொடுக்கிறேன். ஓ! இறைவா! ஸ்ரீகாந்தா! இப்போது நள்ளிரவு வேளை தாண்டிவிட்டது. என் சித்தத்தை உன் பக்கம் திருப்பு. போ! காகட் ஆரத்தி ஆரம்பிக்கும்போகும் நேரம் வந்து விட்டது. இந்த நேரம் பக்தர்கள் வித விதமான நைவேத்யங்களை உமக்காக தயார் செய்து கொண்டுவருவார்கள்.

(13) ஸ்ரீ ஸத்குரு பதம்

ஸ்ரீ ஸத்குரு பாபாஸாயீ ஹோ
துஜ வாஞ்சுனி ஆச்ரய நாஹீ, பூதலீ    (இருமுறை)

1. மீ பாபீ பதித தீமந்த        (இருமுறை)
தாரணே மலா குருநாதா, ஜடகரீ        (இருமுறை)

2. தூ சாந்தி க்ஷமேசா மேரு ஹோ        (இருமுறை)
தூ பவார்ணவீசே தாரூ, குருவரா        (இருமுறை)

3. குருவரா மஜஸி பாமரா, ஆதா உத்தரா,
த்வரித லவலாஹீ, த்வரித லவலாஹீ
மீ புடதோ பவபய டோஹீ        (இருமுறை)
ஸ்ரீஸத்குரு பாபா ஸாயீ ஹோ

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத மஹராஜ்கீ ஜய்
ஓம் ராஜாதிராஜ யோகீராஜ பரப்ரஹ்ம

ஸாயீநாத் மஹராஜ்

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத மஹராஜ்கீ ஜய்!

பதம்

ஸ்ரீ சத்குரு பாபா சாயி உன்னைத் தவிர வேறு புகலிடம் இந்தப் பூ உலகில் வேறு எங்குமில்லை.

1. நான் பாவி. ஒன்றும் அறியாதவன் அவமானபடுத்தப்பட்டவன்.

2. நீ மன்னிப்பு மற்றும் பொறுமை என்னும் மலை

3. இந்த உலகவாழ்க்கை என்ற சுழலிருந்து காப்பாற்றும் படகு. இப்பொழுது இந்த பாவிக்கு முக்தி கொடு. உலக ஆசைகள் என்றும் ஆழ்கடலில் மூழ்கிகொண்டிருக்கும் என்னை விரைந்து காப்பாற்று குருசாயிநாதா.

ஸ்ரீசச்சிதாநந்த குரு சாயிநாத் மகாராஜிக்கு ஜெய்.

 
மேலும் சீரடி சாயி பாபா வழிபாடு »
temple news
சப்த சப்தாஹா சாயி சரித்திர பாராயண விவரம் : துர்லபம் த்ரயேமே வைதத், தெய்வானுக்கிரக ஹேத்துகம் ... மேலும்
 
temple news
1. இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரை நியமித்தோ செய்யலாம். ஆனால் சுயமாக செய்யும் போது நம் கவனம் ... மேலும்
 
temple news
ஸாயிபாபா ஸர்வாந்தார்யாமி, (எங்கும் வியாபித்திருப்பவர்) முற்றும் அறிந்த ப்ரஹ்ம ஞானி, பஞ்ச பிட்சகர் (ஒரு ... மேலும்
 
temple news
சாயி ஸத் சரித்திர பாராயணம் என்றால் சாயிநாதரை ஆராதனை செய்வதாகும். சாயி நாதரின் மறு நாமமாக ஸத் ... மேலும்
 
temple news
சாயி நாத பூஜைசாயி நாதரின் பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் அவரவர்களின் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar