Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் ... சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 3 சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் ...
முதல் பக்கம் » சீரடி சாயி பாபா வழிபாடு
சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 2
எழுத்தின் அளவு:
சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 2

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2016
03:06

2. நண்பகல் வேளை ஆரதீ (பகல் 12 மணி)

(1) பஞ்சாரதீ (அபங்கம்)

1. கேஉநியா பஞ்சாரதீ, கரூ, பாபாம்ஸீ ஆரதீ
கரூ ஸாயீஸீ ஆரதீ, கரூம் பாபாம்ஸீ ஆரதீ

2. உடா உடா ஹோ பாந்தவ, ஓவாளூ ஹர ரகுமாதவ
ஸாயி ரமாதவ, ஓவாளூ ஹா ரமாதவா

3. கரூநியா ஸ்தீர மன, பாஹூ கம்பீர ஹே த்யான
ஸாயீசே ஹே த்யான, பாஹூ கம்பீர ஹே த்யான

4. க்ருஷ்ணநாதா தத்தஸாயீ, ஜடோ சித்த துஜே பாயீ
சித்த தேவா பாயீ, ஜடோ சித்த துஜே பாயீ

(2) ஆரதீ

ஆரதீ ஸாயிபாபா ஸௌக்யதாதார ஜீவா
சரணரஜாதலீ

த்யாவா தாஸா விஸாவா பக்தான் விஸாவா (ஆரதீ)

1. ஜாளுநீயா அநங்க ஸ்வஸ்வரூபி ராஹே தங்க
முழுக்ஷுஜனாம் தாவீ
நிஜ டோளா ஸ்ரீரங்க டோளா ஸ்ரீரங்க    (ஆரதீ)

2. ஜயா மநீ ஜைஸா பாவ தயா தைஸா அனுபவ
தாவிஸீ தயாகனா ஐஸீ துஜீ ஹீ மாவ,
துஜீ ஹீ மாவ            (ஆரதீ)

2. நண்பகல் வேளை ஆரதீ (பகல் 12 மணி)

(1) அபங்கம்

1. ஐந்து முகதீப ஆரத்தியை பாபாவுக்கு காட்டுவோம். சாயிக்கு ஆரத்தி காட்டுவோம், தீப ஆரத்திகாட்டுவோம்.

2. அன்பர்களே! எழுந்திருங்கள். ரமா காந்தனுக்கு ஆரத்தி காட்டுவோம். காலை ஆரத்தி காட்டுவோம். தினமுமே தீப ஆரத்தி காட்டுவோம்.

3. உறுதியான மனதுடன் தினமும் தீப ஆரத்தி காட்டுவோம். கம்பீரமான கைகள் கொண்டு சாயிக்கு ஆரத்தி காட்டுவோம்.

4. உறுதியான மனத்துடன் உம்மை பணிந்தோம். கிருஷ்ண நாததத்த சாயீ! உம்மை உறுதியான மனத்துடன் பணிந்தோம்.

(2) ஆரத்தி

உயிரினங்களுக்கு சௌக்யத்தைத்தரும் சாயீ! பாபா உம் திருவடித் தூசியில் அடியவருக்கு சுகத்தை தருபவரே. பக்தருக்கு தருபவரே (ஆரத்தி)

1. மன்மதனை எரித்தவரே. உம் சொந்த உருவத்திலேயே லயித்திருப்பவரே. முக்தி அடைய வேண்டுபவர்களுக்கு உமது தரிசனத்தைக் கொடுங்கள் ஸ்ரீரங்கா (ஆரத்தி)

2. கருணா மூர்த்தியான சாயி பாபா! அவரவர்களின் செயல், பக்திக்கேற்ப அனுபவங்களைக் கொடுத்து எங்களை என்றென்றும் ஆதரிக்கும் பாபா. கருணா மூர்த்தியான பாபா இதுவே உங்கள் தனி வழி (துஸ்ரீ-ஆரத்தி)

3. துமசே நாம த்யாதா ஹரே ஸம்ஸ்ருதிவ்யதா
அகாத தவ கரணீ மார்க தாவிஸீ அநாதா
தாவிஸீ அநாதா             (ஆரதீ)

4. கலியுகீ அவதார ஸகுண ப்ரஹ்ம ஸாசார
அவதீர்ண ஜாலாஸே ஸ்வாமீ தத்த திகம்பர
தத்த திகம்பர            (ஆரதீ)

5. ஆடாம் திவஸா குருவாரீ பக்த கரிதீ வாரீ
ப்ரபுபத பஹாவயா பவ பய நிவாரீ பய நிவாரீ    (ஆரதீ)

6. மாஜா நிஜத்ரவ்ய டேவா தவ சரணரஜ ஸேவா
மாகணே ஹேஞ்சீ ஆதா
தும்ஹாம் தேவாதி தேவா, தேவாதி தேவா    (ஆரதீ)

7. இச்சித தீந சாதக நிர்மல தோய நிஜஸூக
பாஜாவேம் மாதவா யா ஸாம்பாள ஆபுலீ பாக,
ஆபுலீ பாக             (ஆரதீ)

(3) ஆரதீ (ஜய தேவ)

1. ஜய தேவ ஜய தேவ தத்தா அவதூத,
ஓ ஸாயீ அவதூதா
ஜோடுனி கர தவ சரணீ டேவிதோ மாதா
ஜய தேவ ஜய தேவ......
அவதரஸீ தூ யேதா தர்மாதே க்லாநீம்
நாஸ்தீகாம் நாஹீ, தூ லாவிஸீ நிஜபஜனீ

3. <உமது நாமத்தை இடைவிடாது செபம் செய்பவரின் சம்சாரதுக்க பயத்தை நீக்கி, ஆதரவற்றவர்களுக்கு வழி காட்டுகிறீர்கள். பாபா (தாவிஸி ஆரத்தி) உங்கள் செயல்கள் ஆழம் காண முடியாதவை.

4. கலியுகத்தில் அவதாரம் எடுத்து வந்த கடவுள் நீ. உருவமற்ற நிலையிலிருந்து ஒரு உருவம் தாங்கி அவதரித்திருக்கிறாய். தத்தாத்ரேயரின் அவதாரமே! திசைகளை ஆடையாய் உடுத்திக் கொண்டுள்ள ஈச்வரா (தத்த - ஆரதி)

5. சம்சாரதுக்க பயத்திலிருந்து விடுபட வேண்டி வியாழக்கிழமை தோறும் பக்தர்கள் உம் தரிசனம் காண உமது கோயிலிற்கு வருகிறார்கள் (பய - ஆரத்தி)

6. தேவர்களுக் கெல்லாம் முதல்வனாகிய தேவனே! எனது ஒரே வேண்டுகோள் இது தான். உங்கள் திருவடிகளுக்கு என்றென்றும் சேவை செய்வதே. எங்களது நீங்காத செல்வமாயிருக்கட்டும். (தேவாதி -ஆரத்தி)

7. இந்த எளிய (சாதகப்பறவை மழை நீர் பெய்யும் பொழுது அதை மட்டுமே ஆகாயத்தினின்றும் அது கீழே விழுமுன் உறிஞ்சி ஆதாரமாக உட்கொள்ளும். மழை நீரே அதன் ஆதாரம்.) சாதகப் பறவையான மாதவனுக்கு (ஆரத்தியை இயற்றியவர் மாதவ்ராவ் அட்கர்.) அவன் வேண்டும் ஆத்ம சுகம் என்ற தூய தண்ணீரை ஊற்றி உமது உறுதி மொழியைத் காப்பாற்றும்.

(3)

1. ஜெயதேவ! ஜெயதேவ! தத்த அவதூதா! சாயீ அவதூதா! இருகைகளையும் கூப்பி உங்கள் பாதங்களை என்றென்றும் வணங்குகிறோம். தர்மத்திற்கு அழிவு ஏற்படும் போது அதை தடுக்க அவதரிக்கிறாய். நாத்திகர்களும் கூட மனம் மாறி உம்மை போற்றுகின்றனர். எண்ணற்ற உருவங்களில் பல

தாவிஸீ நானா லீலா அஸங்க்ய ரூபாநீ
ஹரிஸீ தீனாஞ்சே தூ ஸங்கட தினரஜநீ     (ஜய தேவ ஜய தேவ)

2. யவன ஸ்வரூபீ யேக்யா தர்சன த்வா திதலே
ஸம்சய நிரஸுநியா தத்வைதா காலவிலே
கோபீசந்தா மந்தா த்வாசீ உத்தரிலே
மோமின வம்சீ ஜந்முனி லோகாம் தாரியலே    (ஜய தேவ ஜய தேவ)

3. பேத ந தத்வீ ஹிந்துயவனாம்சா காஹீ
தாவாயாஸீ ஜாலா புனரபி நரதேஹீ
பாஹஸீ ப்ரேமாநே தூ ஹிந்தூ - யவனாம்ஹீ
தாவிஸீ ஆத்மத்வாநே வ்யாபக ஹா ஸாயீ    (ஜய தேவ ஜய தேவ)

4. தேவா ஸாயீநாதா த்வத்பதநத வ்ஹாவே
பாமாயாமோஹித ஜநமோசன ஜணி வ்ஹாவே
த்வத்க்ருபயா ஸகலாஞ்சே ஸங்கட நிரஸாவே
தேசில தரி தே த்வத்யச க்ருஷ்ணானே காவே    (ஜய தேவ ஜய தேவ)

(4) அபங்கம்

1. சீரடீ மாஜே பண்டரபுர, ஸாயீபாபா ரமாவர,
பாபா ரமாவர, ஸாயீ...

விதமான அற்புதங்களைக் காட்டுகிறாய். ஏழை எளியவர்களின் துன்பங்களை போக்குகிறாய் (ஜய)

2. ஒரு முறை யாருக்கோ முஸ்லீமாக காட்சியளித்தாய். அவர் சந்தேகங்களை எல்லாம் நீக்கினாய். அவனது சந்தேகங்களை நீக்கி ஆன்மீக ஞானப் பாதையில் செல்ல வைத்தாய். மந்தபுத்தி கொண்ட கோபீ சந்தனை கடைத் தேற்றினாய். உலகத்தை உய்விக்க நெசவாளியாய் (கபீர்தாஸ்) தோன்றினாயே (ஜய)

3. இந்த முஸ்லீம் ஒற்றுமையை நிலைநாட்ட, அவர்களுக்கு இடையே எந்த வேற்றுமையுமில்லை எனக்காட்டவே மீண்டும் மனித உடலில் வந்தாய். அன்புடன் நீ அனைவரையும் என்றும் காக்கின்றாய். இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்றாகவே பார்க்கிறாய். ஆத்மாவின் எங்கும் நிறைந்துள்ள தன்மையை பக்தர்களுக்கு உபதேசம் செய்கிறாய் (ஜய)

4. தேவா! சாயிநாதா! உனது பாதங்களை வணங்குகிறோம். மாயையால் மயக்கப்பட்டுள்ள மக்களை மாயையிலிருந்து விடுவிப்பாய்! எல்லோருடைய கஷ்டங்களும் நீங்கி அனைவரும் நலம்பெற அருள் புரிவாய்! உமது புகழைப்பாடும் திறமையை க்ருஷ்ணாவுக்குக் (கிருஷ்ண ஜோகோஸ்வர் பீஷ்மா இந்த பாடலை இயற்றியவர்.)கொடு. (ஜய)

(4)

1. சீரடியே எனது பண்டரிபுரம். சாயிபாபாவே விட்டல் ( விட்டல் என்பது பாண்டு ரெங்கன். மகாராஷ்ட்ர மாநில மக்களின் தெய்வம்.) தூய பக்தியே சந்திரபாகா நதி (பண்டரிபுரத்தில் ஓடும் புனித நதி சந்த்ரபாகா), நம்பிக்கையே(புண்டலீகன் -இவன்பெயரால் ஏற்பட்ட புண்டலீக புரம் பின்னாளில் பண்டர்பூர் /பண்டரிபுரம் என்றாயிற்று. )புண்டலீகனுடைய இருப்பிடம்.

2. ஸுத்த பக்தி சந்த்ரபாகா, பாவ புண்டலீக ஜாகா
புண்டலீக ஜாகா, பாவ...

3. யா ஹோ யா ஹோ அவகே ஜன, கரா பாபாம்ஸீ
வந்தன, பாபாம்ஸீ வந்தன, ஸாயீஸீ வந்தன...

4. கணூ ம்ஹணே பாபா ஸாயீ, தாவ பாவ மாஜே
ஆயீ, பாவ மாஜே ஆயீ, தாவ...

(5) நமன்

1. காலீன லோடாங்கண வந்தீன சரண,
டோள்யாம்நீ பாஹீன ரூப துஜே
ப்ரேமே ஆலிங்கின, ஆநந்தே பூஜின
பாவே ஓவாளின ம்ஹணே நமா

2. த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துச்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ

3. காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா
புத்த்யாத்மனா வா ப்ரக்ருதி ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

4. அச்யுதம் கேசவம் ராமநாராயணம்
க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்

2. சுத்தமான சந்த்ரபாகா நதி புண்டலீகனின் இருப்பிடம்.

3. எல்லோரும் வாருங்கள்! சாயிபாபாவை வணங்கிட வாருங்கள்!

4. வாருங்கள்! வாருங்கள்! பாபா சாயீயை வணங்க வாருங்கள். கணு (தாஸ்கணு) சொல்கிறார். ஓ! சாயிபாபா எனது அன்னையே! காப்பாற்ற ஓடிவா. உன் ஆசிகளைக் கொடு.

(5)

1. கண்களால் தரிசித்தும், பாதங்களை வணங்கியும் அன்போடு ஆரத்தழுவியும், பக்தியுடன் ஆரத்தி காட்டி, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து மகிழ்வேன் என்கிறார் நாமதேவர்.

2. என்னுடைய தேவாதி தேவனே, நீயே என் தாய், தந்தை, உறவினர், நண்பர், நீயே என்னுடைய கல்வியும் செல்வமும். நீயே எனக்கு எல்லாமும் ஆவாய் நீயே அன்பு மற்றும் கருணையின் உருவம்.

3. என்னுடைய வாக்கு, மனம், புலன்கள், புத்தி ஆத்மா எனது இயற்கையான குணம் ஆகியவற்றால் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும் நாராயணனுக்கே சமர்ப்பிக்கிறேன் (அளிக்கிறேன்)

4. அச்யுதன் கேசவன், இராமநாராயணன் கிருஷ்ணர், தாமோதரன், வாசுதேவர், ஹரி ஆகிய எல்லாமாகிய உம்மை

ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம்
ஜானகீநாயகம் ராமசந்த்ரம் பஜே

(6) நாமஸ்மரணம்

ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண
க்ருஷ்ண ஹரே ஹரே     (மூன்று முறை)

ஸ்ரீ குருதேவ தத்தா

(7) புஷ்பாஞ்சலி

ஹரி: ஓம் யக்ஞேன யக்ஞமயஜந்த தேவாஸ்தானி
தர்மாணி ப்ரதமாந்யாஸன்
தே ஹ நாகம் மஹிமான: ஸசந்த
யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவா:

ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்யஸாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸ மே காமாந் காமகாமாய மஹ்யம் காமேச்வரோ
வைச்ரவணோ ததாதூ குபேராய வைச்ரவணாய
மஹாராஜாய நம:

ஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்
வைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம்
மாஹாராஜ்யமாதிபத்ய மயம் ஸமந்தபர்யாயீ ஸ்யாத்
ஸார்வபௌம: ஸார்வாயுஷ்ய ஆந்தாதாபரார்த்தாத்
ப்ருதிவ்யை ஸமுத்ரபர்ய்ந்தாயா ஏகராளிதி!

வணங்குகிறேன். ஸ்ரீதரன், மாதவன், கோபிகா வல்லபன்,  ஜானகி நாயகன், ராமச்சந்திரன் ஆகியோரும் நீயே.
(6)

ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண
க்ருஷ்ண ஹரே ஹரே

ஸ்ரீகுருதேவ தத்தா

(7) புஷ்பாஞ்சலி

ஹரி: ஓம் யக்ஞேன யக்ஞமயஜந்த தேவாஸ்தானி
தர்மாணி ப்ரதமாந்யாஸன்
தே ஹ நாகம் மஹிமான: ஸஞ்சத
யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவா:

ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்யஸாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸ மே காமாந் காமகாமாய மஹ்யம் காமேச்வரோ
வைச்ரவணோ ததாது குபேராய வைச்ரவணாய
மஹாராஜாய நம:

ஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்
வைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம்
மாஹாராஜ்யமாதிபத்ய மயம் ஸமந்தபர்யாயீ ஸ்யாத்
ஸார்வபௌம: ஸார்வாயுஷ்ய ஆந்தாதாபரார்த்தாத்
ப்ருதிவ்யை ஸமுத்ரபர்ய்ந்தாயா ஏகராளிதி

ததப்யேஷ ச்லோகோ (அ) பி கீதோ மருத:
பரிவேஷ்டாரோ மருத் தஸ்யாவஸங்க்ருஹே
ஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர் விச்வேதேவா: ஸபாஸத இதி.
------------
(8) நமஸ்காராஷ்டகம்

1. ஆனந்தா துலா தே கஸே ரே ஸ்தபாவே
அனந்தா துலா தே கஸே ரே நமாவே
அனந்தா முகாஞ்சா சிணே சேஷ காதாம்
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

2. ஸ்மராவே மநீ த்வத்பதா நித்ய பாவே
உராவே தரீ பக்திஸாடீ ஸ்வபாவே
தராவே ஜகா தாரூநீ மாயதாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

3. வஸே ஜோ தாவயா ஸந்த லீலா
திஸே அக்ஞ லோகாம்பரீ ஜோ ஜனாம்லா
பரீ அந்தரீ ஞான கைவல்யதாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

4. பரா லாதலா ஜன்ம ஹா மாநவாசா
நரா ஸார்த்தகா ஸாதநீபூத ஸாசா
தரு ஸாயீப்ரேமே களாயா அஹந்தா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

ததப்யேஷ ச்லோகோ (அ)பி கீதோ மருத:
பரிவேஷ்டாரோ மருத் தஸ்யாவஸங்க்ருஹே
ஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர் விச்வேதேவா: ஸபாஸத இதி

(8) நமஸ்காராஷ்டகம்

1. ஓ! அனந்தா (விஷ்ணு) பாபா உம்மை எவ்வாறு துதிப்பேன்? அனந்தாபாபா உம்மை எவ்வாறு பணிவேன்? தன் எண்ணற்ற முகங்களால் ஆதிசேஷனும் உன் புகழைப் பாடிக் களைத்துவிட்டான். ஸ்ரீசாயி நாதா உமக்கு எனது சாஷ்டாங்கமான நமஸ்காரங்கள்.

2. தினந்தோறும் பக்தியுடன் உன் பாதார விந்தங்களை தியானம் செய்வேன். அப்படி செய்வதன் மூலம் என் மனதில் பக்தி மலரும். நாங்கள் வாழ்ந்தால் உங்கள் அடியவர்களாக அறியப்படவேண்டும். மாயையை அழித்து சம்சாரக் கடலை தாண்டுவேன். என் பெற்றோருக்கு, குடும்பத்திற்கு முக்தி கிடைக்கச் செய்வேன். ஸ்ரீசாயி நாதா உமக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

3. நல்ல மனிதர்களுக்கு யார் தன் லீலைககளைக் காட்டி மகிழ்ந்தாரோ, உலக வாழ்க்கையில், (லௌகிக வாழ்க்கையில்) ஈடுபட்டு உள்ளவர்களால் யார் அறியப்பட மாட்டாதவரோ, ஆனால் உண்மையில் ஞானத்தையும், மோட்சத்தையும் அளிப்பவர் எவரோ அத்தகைய ஸ்ரீசாயி நாதா உமக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

4. அதிர்ஷ்டத்தின் காரணமாக இந்த மனிதப்பிறவி நமக்கு கிடைத்திருப்பது மிகவும் நல்ல ஒன்று. அதன் மூலமாகவே இந்தப்பிறவி எடுத்ததன் பயனை அடைய முடியும். சாயி பாபாவின் மீது பக்திகொண்டு அதன் மூலம் நம் அகந்தையை (கர்வம், இறுமாப்பு) அடியோடு வேரறுக்க உதவும் ஸ்ரீசாயி நாதருக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

5. கராவே கரீ ஸான ஆல்பக்ஞ பாலா
கராவே அம்ஹாம் தன்ய சும்போனி காலா
முகீ கால ப்ரேமே கரா க்ராஸ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

6. ஸுராதீக ஜ்யாஞ்ச்யா பதா வந்திதாதீ
ஸுகாதீக ஜ்யாதே ஸமானத்வ தேதீ
ப்ரயாகாதி தீர்த்தே பதீ நம்ர ஹோதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

7. துஜ்யா ஜ்யா பதா பாஹதா கோப பாலீ
ஸதா ரங்கலீ சித்ஸ்வரூபி மிளாலீ
கரீ ராஸக்ரீடா ஸவே க்ருஷ்ணநாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

8. துலா மாகதோ மாகணே ஏக த்யாவே
கரா ஜோடிதோ தீன அத்யந்த பாவே
பவீ மோகனீராஜ ஹா தாரீ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க  ஸ்ரீஸாயிநாதா

(9) ப்ரார்த்தனா

1. ஐஸா யேயீ பா, ஸாயீ திகம்பரா
அக்ஷயரூப அவதார
ஸர்வஹி வ்யாபக தூ, ச்ருதிஸாரா
அனுஸுயா அத்ரிகுமாரா (ஐஸா யேயீ பா)

5. அறியாத சிறு குழந்தைகளின் கைகளை பிடித்துக் கொள்வது போல் எங்களது கைகளைப் பற்றிக் கொண்டு எங்கள் கன்னங்களில் முத்தமிட்டு எங்களை உய்ய வைப்பீர், வழி நடத்துவீர் உண்மையான அன்பை எங்கள் வாயில் ஊட்டும் ஸ்ரீசாயி நாதருக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

6. எவரது பாதங்களை தேவர்களும் துறவிகளும் வணங்குகிறார்களோ, சுகர் முதலான முனிவர்கள் எவரைத் தனக்கு நிகராக எண்ணுகிறார்களோ, எவரது பாதங்களை பிரயாகை போன்ற புனிதத்தலங்களும் வணங்குகின்றனவோ அந்த ஸ்ரீ சாயிநாதருக்கு என்சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

7. உன் பாதங்களை கோபிகைகளும் போற்றி வணங்கி சதா கிருஷ்ண நாதரை எண்ணி தியானித்து சித்ஸ்வரூபத்தை அடைந்தார்கள். அவருடன் ராசக்கிரீடை செய்து மகிழ்ந்தார்கள். ஸ்ரீ சாயிநாதா! உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

8. திக்கற்றவனான (கதியில்லாதவன்) நான் என் இரண்டு கைகளையும் ஒன்றாகக் கூப்பி வணங்குகிறேன் (பஸ்மாசுரனை அழித்த விஷ்ணுவின் பெயர். இந்தத் துதியை இயற்றிய நாசிக் நகர தாசில்தாரின் பெயரும் இதுவே.) மோகினி ராஜாவே ஒன்றை வேண்டி நிற்கின்றேன். பிறவிச் சுழலிலிருந்து (சம்சார வாழ்க்கையிலிருந்து) என்னை விடுவிக்க கோரி, ஸ்ரீசாயிநாத! உம்மை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

(9) ப்ரார்த்தனா

1. சத்குரு சாயி நாதா! திசைகளை உடையாகக் கொண்டவரே! எண்ணிக்கையற்ற உருவங்களில் தோன்றி எங்கும் நிறைந்துள்ளாய். வேதங்களின் சாரம் நீ. அனுசூயா அத்ரி மகரிஷி தம்பதியரின் குழந்தை.

காஸீ ஸ்நான ஜப, ப்ரதிதிவஸீ,
கோல்ஹாபுர பிக்ஷேஸீ
நிர்மல நதீ துங்கா, ஜல ப்ராஸீ
நித்ரா மாஹுர தேஸீ    (ஐஸா யேயீ பா)

2. ஜோளீ லோம்பதஸே வாம கரீ,
த்ரிஸூல டமரு தாரீ
பக்தாம் வரத ஸதா ஸுககாரீ
தேஸீல முக்தீ சாரீ    (ஐஸா யேயீ பா)

3. பாயீ பாதுகா ஜபமாலா
கமண்டலு ம்ருக சாலா
தாரண கரிஸீ பா
நாகஜடா முகுட சோபதோ மாதா     (ஐஸா யேயீ பா)

4. தத்பர துஜ்யா யா ஜே த்யானீ,
அக்ஷய த்யாஞ்சே ஸதநீ
லக்ஷ்மீ வாஸ கரீ தினரஜனீ
ரக்ஷிஸி ஸங்கட வாருனி    (ஐஸா யேயீ பா)

5. யா பரி த்யான துஜே குருராயா
த்ருச்ய கரீ நயனாம் யா
பூர்ணானந்தஸுகே ஹீ காயா
லாவிஸி ஹரிகுண காயா    (ஐஸா யேயீ பா)

(10) ஸ்ரீஸாயிநாத மஹிமா ஸ்தோத்ரம்

1. ஸதா ஸத்ஸ்வரூபம் சிதானந்தகந்தம்
ஜகத்ஸம்பவஸ்தான ஸம்ஹார ஹேதும்
ஸ்வபக்தேச்சயா மானுஷம் தர்சயந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

தினசரி காசியில் ஸ்நாநமும், ஜபமும் செய்கிறாய். கோல்காபூரில் பிக்ஷை எடுத்துக்கொண்டு, நிர்மலமான துங்கபத்ரா நதியின் தண்ணீரைப்பருகிக்கொண்டு மாஹுர் தேசத்தில் தூங்குகிறாய். அத்தகைய நீ இங்கு வா!

2. ஜோல்னா பையை இடது தோளில் தொங்க விட்டுக் கொண்டு, கைகளில் திரி சூலத்தையும், டமருவையும் ஏந்திக்கொண்டு பக்தர்களுக்கு வரம் அளித்து எப்பொழுதும் எங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுபவனாக எங்கள் முத்திக்கு வழிகாட்டு.

3. பாதங்களில் பாதுகைகளை அணிந்து கொண்டு ஜபமாலை, கமண்டலம் கைகளில் ஏந்தி மான் தோலை ஆடையாய் உடுத்தியுள்ளாய். தலையில் ஜடையும் அதன்மேல் கீரிடம் போன்று நாகமும் விளங்குகிறது.

4. எவர் உன்னைத் தினமும் தியானம் செய்கிறார்களோ அவர்கள் வீடுகளில் லட்சுமி தேவி இரவும் பகலும் எப்போதும் தொடர்ந்து நீங்காது வசிக்கிறாள். அவர்களது கஷ்டங்களை போக்கி நவநிதிகளையும் அளித்து சுகவாழ்வு அருளுகிறாள்.

5. ஓ! குருராயா! உங்கள் அழகிய உருவத்தை பார்க்கும் பொழுது எல்லாம் நான் பரமானந்தத்தை அநுபவிக்கிறேன். ஹரியின் குணங்களை போற்றிப்பாடும் பாட்டுகளால் அவர்களது உடலை பூரண ஆனந்த சுகத்தில் ஆழ்த்துகிறீர்கள்.

(10) ஸ்ரீசாயி நாத மஹிம்ன ஸ்தோத்ரம்

1. எப்பொழுதும் ஆனந்தத்தோடு கூடிய உருவத்துடன் உண்மையான அவதாரமாய் பேரின்ப பெரு உணர்வோடு விளங்கி, இந்த உலகத்தை தோற்றுவித்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் புரியும் ஈஸ்வரா. பக்தர்களின் விருப்பத்திற்கு பணிந்து, மனித உருவெடுத்து வந்த இறைவா! வணங்குகிறேன்! என் இறைவனாய் சத்குரு வாய் விளங்குபவரே.

2. பவத்வாந்தவித்வம்ஸ மார்த்தாண்டமீட்யம்
மனோவாகதீதம் முனிர்த்யான கம்யம்
ஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குணம் த்வாம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

3. பவாம்போதி மக்னார்திதானாம் ஜனானாம்
ஸ்வபாதாச்ரிதானாம் ஸ்வபக்திப்ரியாணாம்
ஸமுத்தாரணார்த்தம் கலௌ ஸம்பவந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

4. ஸதா நிம்பவ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்
ஸுதாஸ்த்ராவிணம் திக்தமப்யப்ரியம் தம்
தரும் கல்பவ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

5. ஸதா கல்பவ்ருக்ஷஸ்ய தஸ்யாதிமுலே
பவேத் பாவ புத்யா ஸபர்யாதி ஸேவாம்
ந்ருணாம் குர்வதாம் புக்திமுக்தி ப்ரதம் தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

6. அனேகாச்ருதாதர்கய லீலாவிலாஸை
ஸ்மாவிஷ்க்ருதேசான பாஸ்வத் ப்ரபாவம்
அஹம்பாவஹீனம் ப்ரஸந்நாத்மபாவம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

7. ஸதாம் விச்ராமாராமமேவாபிராமம்
ஸதா ஸஜ்ஜனை: ஸம்ஸ்துதம் ஸன்னமத்பி:

 
மேலும் சீரடி சாயி பாபா வழிபாடு »
temple news
சப்த சப்தாஹா சாயி சரித்திர பாராயண விவரம் : துர்லபம் த்ரயேமே வைதத், தெய்வானுக்கிரக ஹேத்துகம் ... மேலும்
 
temple news
1. இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரை நியமித்தோ செய்யலாம். ஆனால் சுயமாக செய்யும் போது நம் கவனம் ... மேலும்
 
temple news
ஸாயிபாபா ஸர்வாந்தார்யாமி, (எங்கும் வியாபித்திருப்பவர்) முற்றும் அறிந்த ப்ரஹ்ம ஞானி, பஞ்ச பிட்சகர் (ஒரு ... மேலும்
 
temple news
சாயி ஸத் சரித்திர பாராயணம் என்றால் சாயிநாதரை ஆராதனை செய்வதாகும். சாயி நாதரின் மறு நாமமாக ஸத் ... மேலும்
 
temple news
சாயி நாத பூஜைசாயி நாதரின் பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் அவரவர்களின் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar