Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று மாணிக்கவாசகர் குரு பூஜை! வேளச்சேரி ராமர் கோவில் சம்ரோக்ஷணம் வேளச்சேரி ராமர் கோவில் சம்ரோக்ஷணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி ஆடி முளைக்கொட்டு உற்சவம்: ஆகஸ்ட் 3ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி ஆடி முளைக்கொட்டு உற்சவம்: ஆகஸ்ட் 3ல் துவக்கம்!

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
12:07

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆக., 3ம் தேதி வாஸ்து சாந்தியுடன் ஆடி முளைக்கொட்டு உற்சவம் துவங்குகிறது.கோயில் இணை கமிஷனர் நா.நடராஜன் கூறியதாவது:’ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற கூற்றின்படி விவசாயிகள் ஆடியில் விதை விதைத்தும், நாற்று நட்டும் விவசாயப் பணிகளை மேற்கொள்வர். விவசாயிகள் நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். இதன்படி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடக்கும் விழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள விழாக்கள் நான்கு. அவை ஆடி முளைக்கொட்டு, ஐப்பசி கோலாட்டம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகும்.

ஆடி முளைக்கொட்டு உற்சவம் அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு ஆக., 4 முதல் ஆக., 8ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும். அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆடி வீதியில் நாதஸ்வர இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வார். நாதஸ்வரக் கலைஞர்கள் ’கொட்டு மேளம்’ சிறப்பு இன்னிசையை மீட்டு அம்மனை சேர்த்தி சேர்ப்பர். ஏழாம் நாள் விழாவாக ஆக.,10ம் தேதி இரவு திருவீதியுலா முடிந்த பின் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. ஆக.,3ம் தேதி வாஸ்து சாந்தி துவங்கி ஆக.,14ம் தேதி மீனாட்சி அம்மன் சேத்தி சேரும் வரையிலும் கோயில் மற்றும் உபயதாரர்கள் சார்பில் அம்மனுக்கு தங்க ரத உலா, உபய திருக்கல்யாணம் போன்ற சேவைகள் பதிவு செய்து நடத்திட இயலாது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar