Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தசராவில் வேடம் அணியும் பக்தர்கள் ... சஞ்சீவ்ராய பெருமாள் கோவில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2011
11:09

ஏரல் : ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். ஏரல் மெயின் பஜார் அருகில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கொடை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்துவருதல், மதியம் மகா அபிஷேகம், தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், மாலையில் பிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து கும்பம் எடுத்து வருதல், இரவு 10 மணிக்கு புஷ்ப அலங்கார தீபாராதனை, 10.30 மணிக்கு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் இருந்து ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கொடைவிழாவில் அம்மன் பொன்சப்பரத்தில் நகர் உலா புறப்பாடு நடந்தது. ஏரல் நகர் வீதி சென்ற நிகழ்ச்சியும், தொடர்ந்து வாணவேடிக்கையும் நடந்தது. அம்மன் நகர் உலா வருவதை முன்னிட்டு தெருக்கள் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் சப்பரத்திற்கு தேங்காய் உடைத்து அம்மனை தரிசித்தனர். கொடை விழாவில் ஏரல் பகுதி பொதுமக்கள், பஜார்வியாபாரிகள், சென்னை வாழ் சங்கத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேற்று காலை மற்றும் மதியம் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் இன்று இரவு 9 மணிக்கு ஏரல் ஒன்பது தெரு இந்துநாடார் உறவின் முறை சங்கம் முன்பு சென்னை வாழ் சவுக்கை முத்தாரம்மன் உறவின் முறை நாடார் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை இரவு வழக்காடு மன்றம், வரும் 17ம் தேதி இரவு பட்டிமன்றம், 18ம் தேதி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்துவருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar