Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
501 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை ... பவானியம்மன் கோவிலில் பக்தரின் 6 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூத்துக்குடி பனிமய மாதா சர்ச் திருவிழா நாளை கொடியேற்றத்டன் துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
12:07

துாத்துக்குடி:துாத்துக்குடியில் உலகப்புகழ் பெற்ற பனிமய மாதா சர்ச் உள்ளது. மாதா சர்ச் திருவிழா நாளை ஜூலை 26 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்னையின் திருத்தேர் பவனி ஆக., 5 ம் தேதி நடக்கவுள்ளது. துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆக., 5 ம் தேதி வரை நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். ஜூலை 25 ல் இன்று மாலை கொடி பவனி நடக்கிறது. மறு நாள் காலை 5 மணிக்கு ஜெபமாலையுடன் வழிபாடுகள் துவங்குகிறது. தொடர்ந்து மூன்று திருப்பலிகள் நடக்கும். காலை 7.30 மணிக்கு துாத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. காலை 8.30க்கு சர்ச் முன்பாக உள்ள கொடி மரத்தில் கொடியினை பிஷப் ஏற்றி வைக்கிறார். ஆக., 5 ம் தேதி வரை தினமும் காலை 4.30 மணிக்கு ஜெபமாலை, 4.45 க்கு முதல் திருப்பலி, 5 க்கு இரண்டாம் திருப்பலி, பகல் 12 க்கு ஜெபமாலை, மாலை 3க்கு ஜெபமாலை,மறையுரை, இரவு 7.15 க்கு ஜெபமாலை,நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஆக., 4ல் இரவு 7 மணிக்கு பிஷப் இவோன் அம்பு ரோஸ் தலைமையில் பெருவிழா சிறப்பு ஆராதனை நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு சர்ச் வளாகத்தில் அன்னை திரு உருவ பவனி நடக்கிறது. ஆக., 5ல் காலை 5.30 மணிக்கு மதுரை முன்னாள் பிஷப்பீட்டர் பெர்ணான்டோ தலைமையில் திருப்பலி நடக்கிறது.காலை 7.30 க்கு கூட்டு திருப்பலி, மதியம் 12 மணிக்கு திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு அன்னையின் திருத்தேர் பவனி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வரும். இதனை தொடர்ந்து விழா நிறைவு பெறும். விழா ஏற்பாடுகளை பாதிரியார் லெரின் டிரோஸ், துணை பாதிரியார் வினிஸ்டன், திருச்சபையினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar