Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடையார்குடி துர்க்கை அம்மன் கோவில் ... பராமரிப்பின்றி சிதிலமடையும் நஞ்சுண்டீஸ்வரர் கோவில்! பராமரிப்பின்றி சிதிலமடையும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூத்துக்குடி பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2016
12:07

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உலகப்புகழ் பெற்ற பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  அன்னையின் திருத்தேர் பவனி ஆக., 5 ம் தேதி நடக்கவுள்ளது.

Default Image
Next News

தூத்துக்குடி பனிமய மாதா சர்ச் திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆக., 5 ம் தேதி வரை நடக்கும். இந்த ஆண்டு திருவிழா  கொடியேற்றத்துடன்  துவங்கியது. இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். நேற்று  ஜூலை 25 ல்  மாலை கொடி பவனி நடந்தது. இதில் பக்தர்கள் மாதாவுக்கு காணிக்கை பொருள்கள் வழங்கினர். இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இன்று(ஜூலை26) காலை 5 மணிக்கு ஜெபமாலையுடன் வழிபாடுகள் துவங்கியது.  காலை 7.30 மணிக்குதூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது.  பின் காலை 8.30 க்கு சர்ச் முன்பாக உள்ள கொடி மரத்தில், பக்தர்கள் முன்னிலையில் பிஷப் இவோன் அம்பு ரோஸ் கொடியினை ஏற்றி வைத்தார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தங்கள் மகிழ்ச்சியையும், அன்பை வெளிப்படுத்தும் விதமாக அனைவருக்கும் பால், பழங்கள் வழங்கினர். ஆக., 5 ம் தேதி வரை தினமும் காலை  4.30 மணிக்கு ஜெபமாலை, 4.45 க்கு முதல் திருப்பலி, 5 க்கு இரண்டாம் திருப்பலி, பகல் 12 க்கு ஜெபமாலை, மாலை 3 க்கு ஜெபமாலை,மறையுரை, இரவு 7.15 க்கு ஜெபமாலை,நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஆக., 4ல் இரவு 7 மணிக்கு  பிஷப் இவோன் அம்பு ரோஸ் தலைமையில்  பெருவிழா சிறப்பு ஆராதனை நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு சர்ச் வளாகத்தில் அன்னை திரு உருவ பவனி நடக்கிறது.  ஆக., 5ல் காலை 5.30 மணிக்கு மதுரை முன்னாள் பிஷப்பீட்டர் பெர்ணான்டோ தலைமையில் திருப்பலி நடக்கிறது.காலை 7.30 க்கு  கூட்டு திருப்பலி, மதியம் 12 மணிக்கு திருச்சி பிஷப்  அந்தோணி டிவோட்டா தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு  அன்னையின் திருத்தேர் பவனி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வரும். இதனை தொடர்ந்து விழா நிறைவு பெறும்.விழா ஏற்பாடுகளை பாதிரியார் லெரின் டிரோஸ், துணை பாதிரியார் வினிஸ்டன், திருச்சபையினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar