Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! புரட்டாசி பிறப்பு சர்ச்சையால் பக்தர்கள் கோயிலுக்கு படையெடுப்பு! புரட்டாசி பிறப்பு சர்ச்சையால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 செப்
2011
10:09

விருதுநகர்: வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரமகாலிங்கம் மலைக் கோயில் இடங்கள் முறையான அனுமதியில்லாமல் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவிக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு சுந்தர மகாலிங்கம், சுந்தர மூர்த்தி, சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் ஆடி அமாவாசையும், நவராத்திரி விழாவும், மாதம் தோறும் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்கள் கோயிலுக்கு செல்கின்றனர்.

மதுரை மாவட்டம் சாப்டூர் பகுதியில் உள்ள வாழைதோப்பு வழியாகவும், தேனி மாவட்டம் வருஷநாடு மாளிகைப்பாறை வழியாகவும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வழியாகவும் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரலாம். வனத்துறைக்கு சொந்தமான பகுதிகள் வழியாக 7 கி.மீ., மலைகளில் ஏறிய பின்னரே இந்த கோயிலை அடையமுடியும். இங்கு அகத்தியர், கோரக்கர், சட்டமுனி, மச்சமுனி உட்பட 18 சித்தர்களும் வந்துள்ளனர். கோயில் பகுதியில் 63.76 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1976 முதல் இருந்து வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக சிலர், கோயில் நிர்வாகத்தின் முறையான அனுமதியில்லாமல் பல கட்டடங்கள் கட்டியுள்ளனர். சிலர் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு மேல் பல இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெறும் போது, கட்டடம் கட்டி கோயில் நிர்வாகம் வசம் ஒப்படைப்பதாக கூறுவார்கள். ஆனால், கட்டடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்கின்றனர். சிலர் இதை, தனியாருக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கின்றனர். ஆக்கிரமிப்பு செய்பவர்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் துணை போவதால், நடவடிக்கை எடுப்பதில்லை. சதுரகிரி மலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டினால், இந்த மலையில் உள்ள புனிதம் கெடும் வாய்ப்புள்ளது.இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சுதர்சன் கூறுகையில், ""சதுரகிரிமலைப்பகுதியில் உள்ள கட்டடங்கள் முறைப்படுத்தும் வகையில் இன்று நடக்கும் கூட்டம் பற்றி தெரியாது. இது தவறான பாதைக்கு அழைத்துச்செல்வது போல் உள்ளது. இது குறித்து கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மாதத்திற்கு 10 டன் விறகுஎங்கிருந்து வருகிறது: மலை ஏறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பு தான். கோயில் பகுதியில் உள்ள மரங்களை அழித்து அன்னதானம் என்ற பெயரில் விறகுக்காக அழிக்கப்பட்டு வருகின்றன. மாதத்தில் அமாவாசை,பவுர்ணமி தினம் மட்டுமே அன்னதானம் என்றாலும் 10 டன் விறகு செலவிடப்படுகிறது. அன்னதானம் செய்பவர்களே மரங்களில் காய்ந்து விழுந்த பகுதிகளை மட்டுமே சேகரித்து அன்னதான சமையலுக்கு பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். முழுமையாக விறகு எரிக்க தடை விதித்து சிலிண்டர் மூலம் மட்டுமே அன்ன தானம் வழங்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சதுரகிரி மலையில்புனிதம் காக்கப்படுமா:சதுரகிரி மலையில் கோயிலுக்கு சாமி கும்பிடுபவர்கள் வந்து செல்வதை காட்டிலும், "ஜாலிக்காக வந்து செல்பவர்கள் அதிகரித்துள்ளனர். இவர்கள் அனுமதியில்லாத கட்டடங்களில் தங்கி மது குடித்து விட்டு, தகராறு செய்து வருகின்றனர். சதுரகிரி மலையில் இன்றும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக பக்தர்கள் நம்பிக்கையில் வருகை தருகின்றனர். மலைகோயிலின் புனிதத்தன்மை காக்க இந்து சமய அறநிலையத்துறை இனியாவது நடவடிக்கை எடுக்குமா?

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar