சிதம்பரம்: ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, சிதம்பரம் சிவகாம சுந்தரி சமேத நடராஜர், நேற்று வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றில்எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதனையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் சப்பரத்தில் கொள்ளிடம் நதிக்குச் சென்றார். அங்கு சுவாமிக்கு சிற ப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அட்சர ராஜர் எனப்படும், நடராஜர் உருவம் பொறித்த வேல் கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து, அட்சர ராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கொள்ளிடம் ஆற்றில் நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.