Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜருக்கு ... பழநியில் ஆடிப்பெருக்கு விழா தேங்காய் சுடும் நிகழ்ச்சி பழநியில் ஆடிப்பெருக்கு விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்!
எழுத்தின் அளவு:
குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்!

பதிவு செய்த நாள்

03 ஆக
2016
11:08

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண் சோறு சாப்பிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் அருகே கோட்டுபாக்கம் கிராமத்தில், பழமை வாய்ந்த பரதேசி ஆறுமுக சுவாமி கோவில் உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி குரு பூஜை நடந்தது. இதற்காக இங்கு யாக குண்டம் அமைத்து யாகங்கள் நடந்தது. பின்னர் பரதேசி சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதத்தை, விழாவில் பங்கேற்ற குழந்தை இல்லாத பெண்கள், முந்தானையால் வாங்கிக் கொண்டு அருகே உள்ள குளக்கரை படி மீது வைத்து, மண்டியிட்டு கைகளை பின்னால் கட்டிக் கொண்டு குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டனர். கடந்த ஆண்டு குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டு, குழந்தை பெற்றவர்கள், குடும்பத்துடன் வந்து, பிறந்த குழந்தைக்கு எடைக்கு எடை நாணயம் போட்டு, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி செலுத்தி, பரதேசி சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், புதுச்சேரி, வந்தவாசி, சேத்பட், ஆரணி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar