Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ... பெரும்பாக்கம் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துறையூர் பெருமாள் மலையில் புரட்டாசி சனி உற்சவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2011
11:09

துறையூர்: துறையூர் பெருமாள்மலையில் புரட்டாசி மாத சனிக்கிழமை உற்சவ விழா இன்று துவங்குகிறது. "மலை மீது செல்லும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரில், "தென் திருப்பதி என பக்தர்களால் கருதப்படும் பெருமாள்மலை மீது ஸ்ரீதேவி பூதேவி ஸமேத பிரஸன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் கொண்டு எழுந்தருளி ஸேவை சாதிக்கிறார். இங்கு புரட்டாசி சனிக்கிழமை உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். இக்கோவிலில் நடக்கும் விழாவில் சுற்று வட்டார மக்கள், கோவில் குடிபாட்டு பக்தர்கள் மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்து வைஷ்ணவ பக்தர்கள் திரளாக வந்து தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி எம்பெருமாளை வணங்கிச் செல்வர். இக்கோவிலில் உள்ள கருப்பண்ணார் சந்நிதியில் விபூதி பிரசாதம் வழங்கப்படுவதால் சைவ மரபினரும் வந்து வழிபடுவதும், இசைத்தூண்கள் அமைந்திருப்பதும், 10 அவதார கருங்கற் சிற்பங்கள் எழிலுடன் அமைந்திருப்பது அனைவரையும் கவரும் சிறப்பாகும். மலை மீதுள்ள இக்கோவிலுக்கு 1,564 படிக்கட்டுகள் வழியாகவும், ஐந்து கி.மீ., நீளமுள்ள மலைப்பாதையை வாகனங்கள் மூலமும் செல்லலாம். உற்சவ விழா புரட்டாசி மாத ஐந்து சனிக்கிழமை நடக்கவுள்ளது. விழாவின் முதல்வாரம் இன்று துவங்குகிறது. அதிகாலை ஐந்து மணி முதல் இரவு வரை அலங்கரிக்கப்பட்ட மூலவர், உற்சவர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். அக்., முதல் தேதி இரண்டாவது வாரம், அக்., எட்டாம் தேதி மூன்றாவது வாரம், அக்., 15ம் தேதி நான்காவது வாரம், அக்., 22ம் தேதி ஐந்தாவது வார உற்சவ விழா நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar