Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுரகிரி மலையில் இன்று நவராத்திரி ... திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்திருமலையில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2011
11:09

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகேவுள்ள தென்திருமலையில் பிரம்மோற்சவம் விழா நாளை (28ம் தேதி) துவங்குகிறது. மேட்டுப்பாளையம் அருகே கே.ஜி. டெனிம் மில் வளாகத்தில், தென்திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு இவ்விழா நாளை துவங்கி அடுத்த மாதம் 7ம் தேதி முடிய பத்து நாட்கள் நடக்கின்றன. முதல் நாள் மாலை 7.30 மணிக்கு அங்குரார்ப்பணத்துடன் விழா துவங்குகிறது, 29ம் தேதி மாலை 5.30 மணிக்கு கொடியேற்றமும், இரவு 8 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி ஊர்வலமும் நடக்கிறது. 30ம் தேதி காலை சின்னசேஷ வாகனம், மாலை அன்னபக்ஷி வாகனம், 1ம் தேதி காலை சிம்ம வாகனம், மாலை முத்துப்பந்தல் வாகனம், 2ம் தேதி காலை கல்ப விருட்ச வாகனம், மாலை சர்வ பூபாள வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. ஆறாம் நாள் காலை ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருமாலை சூடலும், மலையப்ப சுவாமி மோகினி அவதாரத்தில் புறப்பாடும், மாலை கருட சேவையும், 4ம் தேதி காலை அனுமந்த வாகனம், மாலை தங்கரதமும், யானை வாகனத்திலும் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. 5ம் தேதி காலை சூரிய பிரபை வாகனம், மாலை சந்திர பிரபை வாகனம், 6ம் தேதி காலை மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேருக்கு எழுந்தருளலும், தேரோட்டமும், மாலை குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. 7ம் தேதி மாலை கொடியிறக்கமும் நடக்கிறது. ஏற்பாடுகளை மில் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar