Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்திக்காக மாலை ... மதுரையில் சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள்! மதுரையில் சுற்றுச்சூழலை பாதிக்காத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழா!
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழா!

பதிவு செய்த நாள்

30 ஆக
2016
11:08

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் ஆண்டு திருவிழா, நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

நாகை அடுத்த வேளாங்கண்ணியில், ‘கீழை நாடுகளின் லுார்து’ என்று அழைக்கப்படும், ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் ஆண்டு திருவிழா, ஆக., 29ம் தேதி துவங்கி, செப்., 8ம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா, நேற்று மாலை துவங்கியது. மாலை 6.௦௦ மணிக்கு, தேவாலய முகப்பில் இருந்து கொடி பவனி புறப்பட்டு, முக்கிய வீதிகளில் வலம் வந்து, இரவு 7.30 மணிக்கு தேவாலயத்தை அடைந்தது. தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்த பின், லட்சக்கணக்கான பக்தர்களின், ‘மரியே வாழ்க’ என்ற விண்ணைப் பிளக்கும் கோஷத்துடன், கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, தேவாலயம் மற்றும் விண்மீன் தேவாலயத்தில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செப்., 7ம் தேதி இரவு 8.௦௦ மணிக்கு திருத்தேர் பவனி, மறுநாள் 8ம் தேதி மாதா பிறந்த நாள் விழா, விண்மீன் தேவாலயத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு, தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா நாட்களில் தேவாலயத்தின் மேல், கீழ் ஆலயங்கள் மற்றும் விண்மீன் தேவாலயத்தில் நாள்தோறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, கொங்கனி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடக்கிறது. தேவாலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், நவநாள் ஜெபம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar