Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ணாரி உண்டியலில் ரூ.59 லட்சம் ... மழை வேண்டி தேக்கடியில் தமிழக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3 அடி முதல் 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
12:08

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், முனியப்பன் கோவில் அருகே இந்து முன்னணி சார்பில், 208 விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, 1,008 விநாயகர் சிலைகள், இந்து முன்னணி சார்பில் தயாரிக்கப்படுகிறது. கடந்தாண்டு எந்தெந்த இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டதோ, அதே இடத்தில் இவ்வாண்டும் சிலைகள் வைக்க அனுமதி பெற்றுள்ளனர். இதற்காக, ஈரோட்டில், 208 சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகின்றன.இதுபற்றி, இந்து முன்னணி அசோக்குமார் கூறியதாவது: இங்கு, 11 அடி உயர மூல விநாயகர், கைலாய விநாயகர், பாகுபலி விநாயகர், தசாவதாரம் விநாயகர், சிவவிநாயகர், சிம்ம விநாயகர், முருகவிநாயகர், நாட்டிய விநாயகர், நந்தி விநாயகர், திண்டில் அமர்ந்த நிலை விநாயகர், ஓம் விநாயகர் சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு, சம்பத் நகரில் வைக்க, 11 அடி உயரத்தில் மூல விநாயகர் சிலையும், பிற இடங்களில், 3, 5, 7, 9 அடி உயரத்திலான சிலைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. காகிதக்கூழ், கிழங்கு மாவு, தேங்காய் நார்களில் தயாரித்து, இயற்கை சாயம் பூசப்படுகிறது. இன்று முதல் இச்சிலைகள் அந்தந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, 5ம் தேதி காலை அந்த இடங்களில் வைக்கப்பட்டு, பூஜை நடக்கும். அனைத்து சிலைகளும், 8ம் தேதி கரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar