Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் செப்.19 ... அமிர்த கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி வீதியுலா அமிர்த கணபதி கோவிலில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவானியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பவானியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

07 செப்
2016
11:09

பெரியபாளையம்: ஆடி மாத திருவிழாவிற்கு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வரும் நிலையில், பவானியம்மன் கோவிலுக்கு வரும்  பக்தர்களுக்கு தங்கும் வசதி  மற்றும் தேங்கும் தண்ணீர், குப்பை ஆகியவற்றால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரியபாளையம்,  பவானியம்மன் கோவிலில் ஆடி மாத விழா தற்போது நடந்து வருகிறது. தமிழகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு சனி,  ஞாயிறு ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர். ஆனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளுக்கு பல லட்சம் ரூபாய், எல்லாபுரம் ஒன்றியக் குழு பொது நிதியில் இருந்து செலவு செய்யப்படுகிறது.

ஆனால், ஆங்காங்கே குப்பை, சாலையில் தேங்கும்  தண்ணீர் ஆகியவற்றில் கொசுக்கள் உருவாகி, நோய் பரவும் தொழிற்சாலையாக பெரியபாளையம் உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாவட்ட நிர்வாகம், அதிகளவு பக்தர்கள் குவியும் பெரியபாளையத்தை கண்டுகொள்ளாதது, அவர்களுக்குத் தான் வெளிச்சம். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு போதுமான அளவு இடவசதி இல்லை. ஆரணி ஆற்றில் போடப்பட்டுள்ள தற்காலிக குடில்களில் தங்க வேண்டி உள்ளது. இயற்கை உபாதைகளை கழிக்கவும், குளிக்கவும் இடமின்றி அவதிப்படுகின்றனர். இனி வரும் காலங்களில் பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar