Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி விழா ... ஈரோடு காந்தி கோவிலில் ஜெயந்தி விழா சிறப்பு பூஜை! ஈரோடு காந்தி கோவிலில் ஜெயந்தி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்தி மண்டபத்தில் அதிசய சூரிய ஒளி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 அக்
2011
11:10

கன்னியாகுமரி : காந்தி ஜெயந்தியையொட்டி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விழும் அதிசய சூரிய ஒளியை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். தேச விடுதலைக்காக பாடுபட்ட காந்திஜி 1948ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் டில்லியில் தகனம் செய்யப்பட்டு பின்னர் அவரது அஸ்தியை கலசங்களில் சேகரித்து நாட்டின் புனித நதிகள், கடல்கள், மலைகளில் தூவவும், கரைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி காந்தியடிகளின் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக கன்னியாகுமரி கடற்கரையில் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அஸ்தி கடலில் கரைக்கப்பட்டது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய இடத்தில் நினைவுமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு 1954ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1956ம் ஆண்டு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. குமரி கடற்கரையில் சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் 79 அடி உயரத்தில் இந்திய கலாசாரம், பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக அகிம்சை, சமாதானம், வாய்மை என்ற தத்துவத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தின் உள்பக்கம் காந்தியடிகளின் வாழ்க்கையையும், தலைவர்களோடு இருக்கும் அரிய புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் முக்கிய அம்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி பகல் 12 மணிக்கு காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் சூரிய ஒளி விழும். இந்த அபூர்வ காட்சியை காண ஆண்டு தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு கூடுகின்றனர். இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. காந்தியின் அஸ்தி மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. 12 மணியளவில் அஸ்தி மண்டபம் மீது அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. இந்த காட் சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு களித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar