Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை சுப்பிரமணியசுவாமி ... கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயிலில் தேரோட்டம் கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரவான் திருவிழா குறிச்சியில் துவக்கம்
எழுத்தின் அளவு:
அரவான் திருவிழா குறிச்சியில் துவக்கம்

பதிவு செய்த நாள்

10 நவ
2016
11:11

குறிச்சி: குறிச்சியில், அனைத்து சமூகத்தார் இணைந்து நடத்தும் அரவான் திருவிழா, ஊர் எல்லை கட்டுதலுடன் துவங்கியது. விழா நேற்று முன்தினம் மாலை, குறிச்சி முதுப்பார் கோவிலில் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து ஊர் எல்லை கட்டுதல், அரவானுக்கு உயிர் பிடித்தல், கம்பம் நட்டு பூ சாத்துதல் ஆகியவை, ராமராஜ் தலைமையில், அனைத்து சமூக பெரியதனக்காரர்கள் முன்னிலையில் நடந்தன. 14ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 15ம் தேதி இரவு, 8:00 மணிக்கு பெருமாள் கோவிலில் அரவான், அனுமார் சுவாமிகள் கட்டுதல் நடக்கிறது. 16ம் தேதி காலை, 6:00 மணிக்கு அரவான் அலங்கரிக்கப்பட்டு உருமால் கட்டும் சீர் முடிந்து, பெருமாள் கோவிலிலிருந்து அரவான் எழுந்தருளுதல் நடக்கிறது. 9:00 மணிக்கு, அரவான் குறிச்சி குளக்கரை விநாயகர் கோவிலில் தீர்த்தமாடி சிறப்பு வழிபாட்டுடன் புறப்படுதலும், மாலை, 6:00 மணிக்கு, அரவான் கோவிலில், அரவான், பொங்கியம்மன் திருமண விழாவும் நடக்கின்றன. மறுநாள் (17ம் தேதி) மதியம், 12:30 மணிக்கு அரவான் கோவிலில் நாதஸ்வர கச்சேரியுடன் விழா துவங்குகிறது. இரவு, 8:30 மணிக்கு, குளக்கரை கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு சீர்முறை வழிபாடு முடித்து, அரவான் புறப்படுதல் நடக்கிறது. நிறைவு நாளான, 18 காலை. 8:00 மணிக்கு அரவான் திருவீதி உலா புறப்பாடு துவங்குகிறது. இரவு, 11:00 மணிக்கு, குறிச்சி, தேவேந்திர குல வேளாளர் சமூக மேடையில் நடக்கும் களப்பலி நிகழ்ச்சியுடன், விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, குறிச்சி அனைத்து சமூக பெரியதனக்காரர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar