Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 10 ஆண்டாக தொடரும் வினோதம் பெருமாள் ... நெல்லையப்பர் கோயிலில் வருணஜெபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் முடி காணிக்கையை ஏலம் விட்டதில் ரூ.133 கோடி வசூல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 அக்
2011
11:10

திருமலை கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடி, முதல் முறையாக, இணையதளம் மூலம், உலகளாவிய அளவில் ஏலம் விடப்பட்டுள்ளது. இதன்மூலம், திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு, 133 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் உள்ள திருமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு, தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் விஷேச நாட்களில், இந்த எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டும். திருமலை கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருவிழா சமயங்களில் தினமும், 45 ஆயிரம் பக்தர்கள் வரை, முடி காணிக்கை செலுத்துவர். இதற்காக, திருமலையில், 650 முடிதிருத்தும் கலைஞர்கள், தேவஸ்தான நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்படும் முடி, நீளம், குட்டை என, தரம் வாரியாக பிரிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டு, விற்பனை செய்யப்படும் வழக்கம் இதுவரை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த முடி, "விக் (செயற்கை தலைமுடி) செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு, அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும், திருமலையில் ஏலம் விடப்படும் முடிக்கு அதிக கிராக்கி உள்ளது. இதுவரை விடப்பட்ட ஏலங்கள், உலகளாவிய தரத்தில் இல்லாததால், மிக குறைந்த அளவிலான போட்டியாளர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றனர். எனவே, இதன்மூலம் கிடைக்கும் வருவாயும் மிகக் குறைவாக இருந்தது. தற்போது, இணையதளம் மூலம் ஏலம் விடப்பட்டு, உலகளாவிய போட்டியாளர்களை ஈர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசு நிறுவனமான, "மெட்டல் ஸ்கிராப் டிரேடிங் கார்ப்பரேஷன் லிட்., என்ற நிறுவனத்துடன் இணைந்து, இதற்கான நடவடிக்கைகளை, திருப்பதி திருமலை தேவஸ்தானம் மேற்கொண்டது.இதையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான போட்டியாளர்கள், இந்த இணையதள ஏலத்தில் பங்கேற்றனர். முதல் முறையாக நடத்தப்பட்ட இணையதள ஏலத்தில், உலகம் முழுவதும் இருந்து, 49 மிகப் பெரிய நிறுவனங்கள் பங்கேற்றன.இறுதியாக, காணிக்கை முடிகள் அனைத்தும், 133 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இந்த தொகை, இதற்கு முந்தைய ஏலங்களில் கிடைத்ததை விட, மிக அதிகம் என, தேவஸ்தான அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிகாரி ஒருவர் கூறுகையில், "தரம் வாரியாக பிரிக்கப்பட்ட, 65 ஆயிரம் கிலோ முடிகள், இணையதளம் மூலம் ஏலம் விடப்பட்டது. இதன்மூலம், இதற்கு முந்தைய ஏலங்களை விட, தற்போது 30 கோடி ரூபாய் அதிகமாக கிடைத்துள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar