Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் மண்டல ... ஷீரடி சாய்பைரவர் கோவிலில் பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆல்கொண்டமால் கோவிலில் பராமரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2016
01:12

உடுமலை : கால்நடைகளின் காவல் தெய்வமான ஆல்கொண்டமால் கோவிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கலையொட்டி, கால்நடைகளுக்கான திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவன்று திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகள் நோய் நொடிகளின்றி ஆரோக்கியத்துடன் இருக்கவும்; கால்நடை வளம் பெருகவும் பொம்மைகள் வைத்து வழிபடுவர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விவசாயிகள் வளர்க்கும் காளைகளை வண்டியில் பூட்டி வந்து இக்கோவிலில் விசேஷ பூஜை நடத்தி வருகின்றனர். இதனால் கால்நடைகள் ஆரோக்கியத்துடனும்; விவாசாயம் செழித்து வளரும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் பொங்கல், மாட்டுபொங்கலன்று கால்நடைகள் ஈனும் கன்று குட்டிகளை விவசாயிகள் இக்கோவிலுக்கு தானமாக வழங்கி வருகின்றனர். இதனால் தைப்பொங்கலின் நான்கு நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில் சுற்றுச்சுவர், சிலைகளுக்கு சுண்ணாம்பு அடித்தல், கடைகள் அமைக்கப்படும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் மைதானங்களை சுத்தம் செய்தல் உட்பட பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகிறது.

புனரமைக்க வேண்டும்: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோவிலுக்கு ஆண்டுதோறும் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால் கிடைக்கும் வருவாய்கேற்ற வகையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதில்லை என்பது பக்தர்களின் கருத்தாக உள்ளது. கோவிலுள்ள கால்நடைகளின் சிலைகள், திட்டுகள் மற்றும் சுற்றுச்சுவர்களில் ஆங்காங்கே விரிசலும், உடைந்தும் காட்சியளிக்கிறது. கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்ட தரைத்தளமும் பெயர்ந்து வருகிறது. அதோடு கோவிலின் முன்மண்டபத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் இறங்கி, அதன் உறுதித்தன்மை வலுவிழந்து காணப்படுவதுடன், மண்டபத்தை தாங்கி நிற்கும் துாணும் விரிசல் விழுந்து வருவதால் கோவிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. திருவிழாவுக்காக மட்டுமே கோவிலினை புதுப்பிக்காமல் ஆண்டுதோறும் அதன் உறுதித்தன்மை பாதிக்காத வகையில், சிதிலமடையும் பகுதிகளை ஆய்வு செய்து புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இல்லையென்றால் வரலாற்று சிறப்புமிக்க கோவிலின் சிறப்புகள் பற்றி இனிவரும் தலைமுறைகளுக்கு தெரியாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. கோவிலுக்கு கிடைக்கும் நிதியை வைத்து புனரமைப்பு பணிகளை மேற்கொண்டால் கோவிலினை சிறப்பாக பராமரிக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar