Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துடியலூரில் அனுமன் ஜெயந்தி விழா மொக்கணீஸ்வரர் கோவிலில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவ பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2016
01:12

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நேற்று துவங்கியது; பகல் பத்து உற்சவம், இன்று துவங்குகிறது. திருப்பூர், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, நேற்று துவங்கியது. நேற்றிரவு, 7:00 மணிக்கு, திருநெடுந்தாண்டகம் பாசுரம் பாடப்பட்டது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், ஆழ்வார்களின், நாலாயிர திவ்ய பிரபந்தங்கள், பகல் பத்து மற்றும் ராப்பத்து என, 20 நாட்கள் பாடப்படுகிறது. இன்று காலை, 10:00 மணிக்கு, திருமொழி திருநாளான, பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. தினமும் பாசுரங்கள் பாடப்படுகிறது. முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி, வரும், ஜன.,8ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீ வீரராகவ பெருமாளுக்கு, திருமஞ்சனம் நடக்கிறது. காலை, 5:30 மணிக்கு, சொர்க்க வாசல் திறப்பு, கருட சேவை, திருவீதியுலா நடைபெறவுள்ளது. அன்றிரவு, 8:00 மணிக்கு, திருவாய்மொதி திருநாளான, ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. 17ம் தேதி, ஆழ்வார் மோட்ஷம்; 11ம் தேதி, கூடாரை வெல்லும் சீர் உற்சவம்; மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாணம் ஆகியவை நடக்கிறது.

ஆருத்ரா தரிசனம்: ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, வரும் ஜன.,2ம் தேதி துவங்குகிறது. அன்றிரவு, 7:00 மணிக்கு, மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவம் துவங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது. 10ம் தேதி இரவு, சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா, 11ம் தேதி நடை பெறுகிறது. அன்று அதிகாலை, 3:30 மணிக்கு மகா அபிஷேகம், 6:30 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மகா தீபாராதனை, ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனமர் நடராஜர் பட்டி சுற்றுதல், திருவீதி உலா ஆகியவை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar