Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை வருமானம் 152.38 கோடி: கடந்த ஆண்டை ... கல்வி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமத்ஜெயந்தி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமத்ஜெயந்தி  விழா நிறைவு

பதிவு செய்த நாள்

30 டிச
2016
04:12

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் கடந்த 3 நாட்களாக நடந்த அனுமத் ஜெயந்தி விழா கோலாகலமாக நிறைவடைந்தது. வத்திராயிருப்பில் உள்ள ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் மாத்வப்பந்து முறையிலான அனுமத்ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முதல் நாள் ஒதுக்குவிரதம் கடைபிடிக்கப்பட்டு கோயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரண்டாம் நாளில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகை அபிஷேகங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து உற்சவர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருக்கு புஷ்ப அலங்காரமும், மூலவருக்கு வடைமாலை அலங்காரமும் நடந்தது. இறுதிநாளில் ஆஞ்சநேயருக்கு ஜெயமாருதி பக்த சபாவின் சார்பில் பஜனை வழிபாடும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. பக்தசபா நிர்வாகிகள், கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். வத்திராயிருப்பு நடுஅக்கிரஹாரம் சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் சேவா சமிதி டிரஸ்ட் சார்பிலும், பக்தர்கள் சார்பிலும் ஆஞ்சநேய ஜெயந்தி வழிபாடு நடந்தது. அதிகாலையில் சுவாமிக்கு 18 வகை அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. பின்னர் சுவாமி ராஜஅலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருக்கு திவ்யநாம வழிபாடும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. டிரஸ்ட் செயலாளர் நாராயணன், பக்தர்கள் ஏற்பாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar