Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதிக்கு 3 டன் பூக்கள் ... திருப்பூர் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திருப்பூர் கரியகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2017
12:02

அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

ராஜேந்திர சோழன் 1019-ல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதன், காரணமாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டம் பெற்றார். அதன் நினைவாக கி.பி.1023-ல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கி அதில் பிரகதீஸ்வரர் கோயிலை நிறுவினான். பெண்ணின் நலினத்தை போல இக்கோவிலின் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் யுனெஸ்கோவால் உலகபாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் கடந்த 1932-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனையடுத்து 85 ஆண்டுகளுக்கு பிறகு பிரகதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த 6-ம் தேதி  உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேசம் கங்கை நதியிலிருந்து 108 குடங்களில் புனிதநீர் எடுத்துவந்து தஞ்சை மாவட்டம் திருலோகி எனும் இடத்தில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலின் குறிப்புகள் கொண்ட இடத்தில் வைக்கப்பட்டு, பின் கடந்த 27-ம் தேதி வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், ஆதினகர்த்தர் ஆகியோர் புடைசூழ யாணை மீது புனிதநீர் வைக்கப்பட்டு ஊர்வலமாக கங்கைகொண்டசோழபுரத்திற்கு வந்தடைந்தது.

85 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற 8 கால பூஜைகள் நடைபெற்றன. இதில் 85 சிவாச்சாரியர்கள், 20 வேத விற்பன்னர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வேதங்களையும், பன்னிரு திருமுறைகளையும் பாடி யாகபூஜைகள் செய்தனர். இந்நிலையில்,  காலை கோபூஜை செய்யப்பட்டு  8.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வந்தது. இதனையடுத்து 9.30 மணியளவில் மூலவர், துர்க்கையம்மன், பிரகன்நாயகி ஆலயங்களின் கோபுரங்களில் வைக்கப்பட்டிருந்த கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றினர். இதனையடுத்து மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக  நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சிகளை காஞ்சி காமகோடி மடத்தினர், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் மற்றும் இந்துஅறநிலையத்துறையினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி அரியலூர் எஸ்பி அனில்குமார் கிரி தலைமையில்  800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar