பதிவு செய்த நாள்
09
பிப்
2017
12:02
வடலூர்: வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூசத்தை முன்னிட்டு 7 திரைகள் விலகி நடந்த ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழாவில் கருமை, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு நிற திரை என, ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.