பதிவு செய்த நாள்
09
பிப்
2017
02:02
திருப்பூர்: அவிநாசி, ராக்கியாபாளையம் அருகே, தேவராயம்பாளையத்தில், மசிரியம்மன் கோவில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த, 5ல், விநாயகர் பொங்கல் வழிபாடு, காப்பு கட்டுதல், தீபாராதனை நடந்தது. 6ம் தேதி, தீர்த்த குடத்துக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம், விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், சக்தி கும்பம் அழைத்தல், பூவோடு அழைத்து வருதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நேற்று அதிகாலை, 5:30க்கு, விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை, மாவிளக்கு ஊர்வலம் ஆகியன நடந்தன. தொடர்ந்து, பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. மங்கள இசையுடன், யாக சாலை பூஜைகள் துவங்கின. பஞ்ச கவ்ய பூஜை, கலச ஸ்தாபனம், 108 சங்கு பூஜை நடந்தது. 108 வகை திரவியங்களில் யாகபூஜைநடந்தது. நிறை வேள்வி, மகா தீபாராதனையை தொடர்ந்து, புனித கலச நீரால், ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீமசிரியம்மன் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.