திருவாடானை, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், தீபாராதனை நடந்தது. மூலவர் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.
* சிக்கல் அருகே மேலக்கிடாரம் திருவனந்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு 18 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். * உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.