Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1008 சிவலிங்கத்திற்கு மஹாருத்ர ஹோமம் மரவனேரியில் தன்வந்த்ரி ஹோமம்: பக்தர்கள் பங்கேற்பு மரவனேரியில் தன்வந்த்ரி ஹோமம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராமர் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்
எழுத்தின் அளவு:
கோதண்டராமர் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
11:02

கோவை : ராம்நகர், கோதண்டராமசாமி கோவிலில் மழை வேண்டி, வருண ஜெபம் மற்றும் ஸ்ரீ ராம நாம ஜெபம் நேற்று விமர்சையாக நடந்தது. பருவ மழை பொய்க்கும் சமயங்களில் மழை வேண்டி வருண பகவானுக்கு செய்யும் ஜெப பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் அடிப்படையில், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியிலிருந்து, உலகம் செழிக்கவும், தண்ணீர் பற்றாக்குறை தீரவும், எவ்வித குறையுமின்றி குடிநீர் கிடைக்கவும், வேளாண் தொழில் பெருகவும், கோதண்டராமசாமி கோவிலில் சிறப்பு, வருண ஜெபம் நேற்று நடந்தது. புரோகிதர்கள் ஜெகன்நாதன் மற்றும் சுந்தரவாத்தியார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். புரோகிதர் சுந்தரவாத்தியார் கூறுகையில், காலை, 7:00 மணிக்கு துவங்கிய ஜெபத்தில், சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஜெபத்திலே உன்னதம் வாய்ந்தது, ஸ்ரீ ராம நாம ஜெபம். மக்கள் ஒருங்கிணைந்து ராம நாமத்தை சொல்லும்போது, அவ்விடமே சுபிக்ஷம் பெறும் என்பது ஐதீகம். எனவே இம்முறை, வருண ஜெபத்துடன் ராம நாம ஜெபமும் சேர்ந்து நடத்தப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும், ஸ்ரீ ராம நாமத்தை எழுத புத்தகம் ஒன்று வழங்கப்பட்டது. மாலை, பேரூரிலிருந்து வரவழைக்கப்பட்ட பஜனை குழுவினரின், நாமசங்கீர்த்தனம் இசை நிகழ்ச்சியுடன் விழா முடிவடைந்தது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar