Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஞ்சூர் பகுதியில் மழை வேண்டிசிறப்பு ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித அந்தோணியாரின் திருப்பண்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2017
12:03

கோவை: புனித அந்தோணியாரின் திருப்பண்டம், இத்தாலியிலிருந்து, நாளை கோவை கொண்டு வரப்படுகிறது.போர்ச்சுக்கலை சேர்ந்த அந்தோணியார், 12ம் நுாற்றாண்டில், கிறிஸ்தவ மத போதகராக பல நாடுகளில் பணியாற்றியவர். கத்தோலிக்க திருச்சபையால், புனிதராக அங்கீகரிக்கப்பட்டவர்களில் முன்னோடியாக கருதப்படுபவர். கோடி அற்புதர் என்று வர்ணிக்கப்படும் புனித அந்தோணியாரின் பெயரில், உலகம் முழுவதும் ஏராளமான கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளன. கத்தோலிக்க திருச்சபையால் அங்கீகரிக் கப்பட்ட புனிதரின் உடலின் ஒரு பகுதி அல்லது அவர் பயன்படுத்திய பொருட்களின் ஒரு பகுதி, திருப்பண்டம் என்றழைக்கப்படுகிறது. பல நுாற்றாண்டுகளுக்கு முன் இறந்த புனித அந்தோணியாரின் திருப்பண்டம், இத்தாலி நாட்டின் பதுவை நகரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.நாளை காலை, 8:00 மணிக்கு கோவைக்கு கொண்டு வரப்படும் திருப்பண்டம், நஞ்சுண்டாபுரத்திலிருந்து, பங்குத்தந்தை ஜான்சன் வீப்பாட்டுப்பரம்பில் தலைமையில் ஊர்வலமாக ராமநாதபுரம் டிரினிட்டி சர்ச் கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு மதியம், 12.30 மணிக்கு புனிதரின் திருப்பண்டம், பொதுமக்களின் தரிசனத்துக்கும், வழிபாட்டுக்கும் வைக்கப்படுகிறது. அதன் பின், எட்டிமடை அசிசி சினேகாலயா ஆசிரமத்துக்கு புனித அந்தோணியாரின் திருப்பண்டம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இரவு, 7:00 மணிக்கு பொது தரிசனத்துக்கு வைக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள, நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில், மகாராஜா மாடசுவாமி, கருப்பசுவாமி, ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சிவன் கோயில்களில் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar