Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் ... திருக்கோஷ்டியூர் மாசி தெப்பம்: மார்ச் 12ல் உற்சவம் திருக்கோஷ்டியூர் மாசி தெப்பம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி பிரம்மோற்சவ விழா: அன்ன வாகனத்தில் உற்சவர் வீதியுலா
எழுத்தின் அளவு:
திருத்தணி பிரம்மோற்சவ விழா: அன்ன வாகனத்தில் உற்சவர் வீதியுலா

பதிவு செய்த நாள்

07 மார்
2017
11:03

திருத்தணி: முருகன் மலைக்கோவிலில் நேற்று மாசி பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் அன்ன வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு பாலித்துவருகிறார். அந்த வகையில் ஐந்தாம் நாளான நேற்று, காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. காலை, 9:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் அன்ன வாகனத்திலும், வெள்ளி மயில் வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இன்று, மாலை, 4:30 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு, 7:30 மணிக்கு யானை வாகனத்திலும் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை தங்கத்தேரும், 9ம் தேதி அதிகாலையில் உற்சவருக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar