Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் தரிசனத்திற்காக குவிந்த ... ஆதாரம் தேடித்தவிக்கும் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் சூரம்சம்ஹாரம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 அக்
2011
11:10

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹார விழா கோலாகலமாக நடக்கிறது. விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இன்று சிறப்பு ரயிலும், சிறப்பு பஸ்களும் இயக்கப்படுவதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறுபடை வீடுகளில் முக்கியமானது திருச்செந்தூர். இது இரண்டாவது படை வீடாகும். சுமார் 2000 ஆண்டு பழமை வாய்ந்த இத்திருத்தலம் . இங்கு ஆண்டுதோறும் விசாகம், ஆவணி, மாசி திருவிழா உட்பட பல திருவிழாக்கள் நடந்த போதிலும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா உலகப்புகழ்பெற்றது. கடந்த 26ம் தேதி தீபாவளி அன்று கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. விழாவில் ஒவ்ö வாரு நாளும் சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் சிகர நிகழ்ச்சியான இன்று சூரசம் ஹாரம் வெகு விமர் சையாக நடக்கிறது. சூரசம் ஹார விழாவை முன் னி ட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பும், 1.30 மணிக் கு விஸ்வரூப தீபாராதனையும், 2.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.

மாலை 4.35 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரத்தை நடக்க முடியாதவர்கள், முதியோர்கள், பெண்கள் சுலபமாக காண்பதற்கு வசதியாக 20அடி அகலமும், 10 அடி உயரமும், பகலிலும் தெரியக்கூடிய இரண்டு எல்சிடி டிவிக்கள் ஒன்று வேலவன் விடுதியிலும், மற்றொன்று ஜெயந்திநாதர் விடுதியிலும் வைக்கப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் நெரிசல் இன்றி சுலபமாக நேரடி ஒளிபரப்பு மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சியை காணலாம். அதுமட்டுமல்லாது விடுதி வளாகங்களிலும் டிவி மூலம் நேரடியாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. கோயில் உள்ளே பக்தர்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குளிர்சாதன வசதியுடன் 4 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோயில் வளாகத்தில் 11 இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் மூலமும், 10 இடங்களில் நல்லிகள் மூலமும் ஆத்தூர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 131 நவீன இலவச டாய்லெட்கள் உள் ளது. இதில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குளிக்க வசதி உள்ளது. கோயில் பஸ் ஸ்டாண்ட், ஜெயந்திநாதர் விடுதி அருகில், பவர் ஹவுஸ் பின்புறம் ஆகிய இடங்களில் இந்த டாய்லெட்கள் உள்ளது. சுகாதார வசதிக்காக 330 சுகாதார பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பக்தர்கள் சாப்பிட்டு போ டும் இலை முதற்கொண்டு உடனுக்குடன் அகற்றி சுத்தமாக வைத்து பணிபுரிந்து வருகின்றனர். டாய்லெட் கழிவுநீரை உடனுக்கடன் வெளியேற்ற கழிவுநீர் டேங்கர் லாரி ஒன்று வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கழிவுநீரை எடுத்து ஊருக்கு வெளியே கொண்டு விடப்படுகிறது.

கோயில் வளாத்தில் 24 மணி நேரம் செயல்படக் கூடிய ஆம்புலென்ஸ் ஒன்றும், செந்தில் ஆண்டவர் விடுதியில் 24 மணி நேர பணியில் மருத்துவ குழு ஒன்றும் செயல்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 12 இடங்களில் கண்காணிப்பு டவர் அமைக்கப்பட உள்ளது. இதில் இருந்து போலீசார் பக்தர்களுக்கு இடையூறு செய்யும் நபர்களை நோட்டமிட்டு பாதுகாப்பு அளிக்கவுள்ளனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சூரசம்ஹார நிகழ்ச்சியில் கோயில் மூலம் நேரடி வர்ணனைகள் நடக்கவுள்ளது. மஹா மண்டபம் முழுவதும் ஏர்கண்டிஷனர் வசதி செய்யப்பட்டுள்ளது. கடலில் குளிக்கும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மீன் வளத்துறை மூலம் படகுகளில் ரோந்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் பக்தர்கள் தைரியமாகவும், சுகாதாரமாகவும் அமர கடற்கரை சுத்தப்படுத்தப்பட்டு புழுதி உண்ணிகள் அழிக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் அன்று வாகனங்களில் வருபவர்களுக்கு பச்சைநிற பாஸ் மற்றும் காவி நிற பாஸ் வழங்கப்பட உள்ளது. இதில் பச்சைபாஸ் நாழிக்கிணறு வரையிலும், காவி பாஸ் தாலுகா அலுவலகம் வரையிலும் செல்லலாம்.

சிறப்பு ரயில்,ஸ்பெஷல் பஸ்கள் இயக்கம்: திருச்செந்தூரில் இன்று நடக்கும் சூரசம்ஹாரவிற்காக நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருö நல்வேலி, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, மதுரை, கோவில்பட்டி, நாகர்கோவில், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப் படுகிறது. இதைப்போல் தென்னக ரயில்வே சார்பில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar