Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலைக்கோவிலில் சூரசம்ஹார விழா! கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சியில் சூரசம்ஹார விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2011
11:11

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் பக்தர்களின்"அரோகரா கோஷத்துடன், சூரன் வதை செய்யப்பட்டு சூரசம்ஹார விழா கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி சுப்ரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. மாலை 3.30 மணிக்கு சுப்பிரமணியசுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். கோவில் வளாகத்தில் இருந்து சூரனை வதை செய்ய புறப்பட்ட சுப்பிரமணியர் சத்திரம் மற்றும் தெப்பக்குளம் வீதி இணையும் இடத்தில், மாலை 4.30 மணிக்கு அம்மன் சக்தி பெற்ற வேல் கொண்டு முதல் சூரன் தாரகனை வதம் செய்யப்பட்டது. தெப்பக்குளத்தில் இருந்து சென்ற சுப்பிரமணிய சுவாமி, வெங்கட்ரமணன் வீதியுடன் இணையுமிடத்தில் இரண்டாவது சூரனான சிங்கமுகன் தலையையும், ராஜாமில் ரோடு சந்திப்பில் தாலூகா போலீஸ் ஸ்டேஷன் எதிரில் மூன்றாவது சூரன் பானுகோபன் தலையையும், தேர்நிறுத்தம் சந்திப்பில் நான்காவது சூரன் சூரபத்மன் தலையும் வதம் செய்யப்பட்டது. சூரன் தலை வதம் செய்யும் ஒவ்வொரு இடத்திலும், பக்தர்கள் அதிகளவில் குவிந்து "அரோகரா கோஷம் எழுப்பினர். சூரனை வதை செய்த பின் சுப்பிரமணியர் பக்தர்கள் படைசூழ, "வெற்றிவேல் கோஷம் முழங்க மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தார். மாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியை காண பொள்ளாச்சி சுற்றுப்பகுதி மக்கள் சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி, வெங்கட்ரமணன் வீதி, பாலக்காடு ரோடு ஆகிய பகுதிகளில் குவிந்ததால், போக்குவரத்துக்கு ஸ்தம்பித்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழாவை தொடர்ந்து சுவாமிக்கு ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar