Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மநாப சுவாமி கோவில் குளத்தை ... தேரில் பவனி வந்த ஹரிகிருஷ்ண பெருமாள் தேரில் பவனி வந்த ஹரிகிருஷ்ண பெருமாள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடத்தின் கும்பாபிஷேகம் எப்போது?
எழுத்தின் அளவு:
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடத்தின் கும்பாபிஷேகம் எப்போது?

பதிவு செய்த நாள்

19 ஏப்
2017
01:04

திருப்போரூர்: சிதம்பர சுவாமிகள் மடத்தில், ஐந்தாண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வரும் திருப்பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என,பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த ஞானியின் மடம், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டில், பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், திருப்பணிகள் செய்ய ஆரம்பிக்கப்பட்டுஇதுவரையில் பணிகள்முடிக்கப்படாமல் உள்ளன. சிதம்பர சுவாமிகளின் சன்னதி, தியான மண்டபம்,அன்னதானக் கூடம், ஆகியவை பணிகள் ஏதும் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது, இந்நிலை, இப்பகுதி வாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வெளியூர்களில் இருந்து, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வருவோர், சிதம்பர சுவாமிகளின் மடம், இங்கு இருப்பதற்கு எந்த விளம்பரமும் இல்லாததால், கந்தசுவாமி பெருமானை மட்டும் தரிசித்து விட்டு,செல்லும் நிலை உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இதில் கவனம் செலுத்தி, மடத்தின் திருப்பணிகளை, விரைவில் முடித்து, கும்பாபிஷேகம் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

இப்படி ஒரு மடம், கண்ணகப்பட்டில் இருக்கிறது என்பதே, வெளியூர் வாசிகளுக்கு தெரிவதில்லை, ஏனென்றால், மடத்தைப் பற்றிய விளம்பரம், திருப்போரூரில் எங்கும் இல்லை, முதலில் அதற்கு ஒரு வழி செய்ய வேண்டும். ஜி.பிரபாகரன், திருப்போரூர்

திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே கேள்விப்பட்டு தான், சிதம்பர சுவாமிகளின் மடத்திற்கு வந்தேன் ஆனால், இங்கு வந்து பார்த்தால், பராமரிப்பு இல்லாமல், திருப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது, வேதனை அளிக்கிறது. வி.முருகன், சென்னை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar