Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மோகனூர் மாரியம்மன் கோவில் விழா ... சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் டிக்கெட் வசூலில் பணியாளர்கள் கொள்ளை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகர்கோவில் டிக்கெட் வசூலில் பணியாளர்கள் கொள்ளை

பதிவு செய்த நாள்

25 ஏப்
2017
11:04

அழகர்கோவில்:அழகர்கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பஸ் மற்றும் நூபுர கங்கை நுழைவு கட்டண டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள், சோலைமலை முருகனை தரிசிக்கவும், நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடவும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். பெருமாளை தரிசித்த பின் மலை மீதுள்ள முருகனை தரிசிக்க கோயில் நிர்வாகம் மூலம் இயக்கப்படும் பஸ்சில் பக்தர்கள் செல்கின்றனர்.

பஸ்சில் செல்ல தலா 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குடும்பத்துடன் சென்றால், ஒரே டிக்கெட்டில் எண்ணிக்கையை எழுதிகொடுத்து மொத்த தொகையையும் வசூலிக்கின்றனர். ஆனால், கோயில் நிர்வாகத்திடம் கணக்கு காண்பிக்கும்போது ஒருவர் மட்டும் எனக்கூறி முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். சில பணியாளர்கள் தொடர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

அதுபோல் மலை மீது உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில் குளிக்க 15 ரூபாய் கட்டணம். இங்கேயும் ஒருவர் மட்டும் என்றுக்கூறி பணியாளர்களில் சிலர் கொள்ளை அடிக்கின்றனர். இதனால் நிர்வாகத்திற்கு தினமும் பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

கோயில் கண்காணிப்பிற்கு உள்துறை, அலுவலகம், வெளி நிர்வாக பணிகள் என 3 கண்காணிப்பாளர்கள் உள்ளனர். இந்த வசூல் கொள்ளையை வெளி நிர்வாகப் பணிகளுக்கான கண்காணிப்பாளர் தான் விசாரிக்க வேண்டும். ஆனால் அவர் கண்டு கொள்ளாததால் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றன. நிர்வாக அதிகாரி மாரிமுத்து அவ்வப்போது டிக்கெட்டுகளை பரிசோதித்து முறைகேட்டில் ஈடுபடும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிர்வாக அதிகாரி கூறுகையில், பணியாளர்கள் மீதான புகார் உறுதிசெய்யப்பட்டால் கடும் தண்டனை விதிப்பதோடு, பல மடங்கு அபராதம் விதிக்கப்படும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar