பதிவு செய்த நாள்
07
ஜூன்
2017
01:06
புதுச்சேரி: சஞ்சீவி நகர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். உழவர்கரை நகராட்சி சஞ்சீவி நகர் கிராமத்தில், சஞ்சீவி விநாயகர், செங்கழுநீர் அம்மன், திரவுபதியம்மன், கெங்கையம்மன் கோவில்களில், பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. 2ம் தேதியன்று, அர்ச்சுணன்– திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்த்து, தபசு, அரவான் களபலி உபயத்தை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.