ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் வைகாசி பெருந்திரு திருத்தேரோட்டம் நடந்தது. கடந்த மே 29 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழாவின் 9 ம் நாளான நேற்று காலை திருத்தேருக்கு வைத்தியநாதர், பிரியாவிடை மற்றும் சிவகாமி அம்பாள் எழுந்தருளினர். ரகு மற்றும் ரமேஷ் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தபின், 8:05 மணிக்கு திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர். கோயில் வீதிகள் வழியாக 9:40 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், தக்கார் ராமராஜ், ஆய்வாளர் பாண்டியன், செயல் அலுவலர் நாராயணி மற்றும் கோயில் அலுவலர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.