Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தி ‘மழை’ பொழியப்பொழிய ஈஸ்வரன் ... மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி விஜயராகவ பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி விஜயராகவ பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2017
10:06

திருத்தணி: கருட வாகனத்தில் விஜயராகவ பெருமாள், நேற்று, வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி, நந்தி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது. கோட்ட ஆறுமுகசுவாமி கோவில். இக்கோவில் வளாகத்தில், விஜயராகவபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, திருத்தணி நகர மளிகை கடை வியாபாரிகள் சங்கம், விஜயராகவ பெருமாள் சுவாமி கருட சேவை விழா குழு மற்றும் திருத்தணி நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கருடசேவை விழா நடத்தியது. விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு, கருட வாகனத்தில் உற்சவர் விஜயராகவ பெருமாள் எழுந்தருளி, திருத்தணி நகர முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம், 1,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவில், உற்சவர் விஜயராகவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பெருமாள், மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு கோவில் வளாகத்தை அடைந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar