Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை ... குதிரை வாகனத்தில் கவுமாரியம்மன் அம்மன் உலா குதிரை வாகனத்தில் கவுமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழுமலையானுக்கே வட்டி குறைப்பு: ரூ.200 கோடி வருமானம் குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:
ஏழுமலையானுக்கே வட்டி குறைப்பு: ரூ.200 கோடி வருமானம் குறைய வாய்ப்பு

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2017
10:07

திருப்பதி: ஏழுமலையானின் வேண்டுதலில், பக்தர்கள் குறை வைத்தால், அவர் வட்டியும் முதலுமாக வசூல் செய்து விடுவார் என்ற நம்பிக்கை, பக்தர்களுக்கு உண்டு. ஆனால், அவருக்கு கிடைக்கும் வட்டியையே, வங்கிகள் தற்போது குறைத்து விட்டன.  திருமலை ஏழுமலையானுக்கு, உண்டியல் வருமானம், கல்யாண மண்டபங்கள், வாடகை அறைகள், தலைமுடி காணிக்கை, ஆர்ஜித சேவா டிக்கெட், பிரசாத விற்பனை உள்ளிட்டவற்றால் கிடைக்கும் வருமானத்தை, செலவு போக தேவஸ்தான நிர்வாகம், வங்கிகளில், டிபாசிட் செய்துள்ளது. டிபாசிட் காலம் முடிந்ததும், அதற்கு கிடைக்கும் வட்டியையும் சேர்த்து, மீண்டும் வங்கிகளில் டிபாசிட் செய்யப்படும்.

வட்டியாக, 780 கோடி ரூபாய்: அதனால், ஆண்டிற்கு ஆண்டு தேவஸ்தானத்துக்கு கிடைக்கும் வட்டி, அதிகரித்து வந்தது. அதன்படி, 2016ம் ஆண்டு, 9 சதவீத வட்டியில், தேவஸ்தானம், 10 ஆயிரம் கோடி ரூபாயை, பல வங்கிகளில் நிரந்தர கால வைப்பு நிதியில், மூன்று ஆண்டு காலத்திற்கு டிபாசிட் செய்துள்ளது. 2016 - 17ல், இதற்கு வட்டியாக, 780 கோடி ரூபாய் கிடைத்தது. மேலும், 2017 - 18ம் ஆண்டிற்கு, இது, 801 கோடி ரூபாயாக உயரும் எனதேவஸ்தானம் கணக்கிட்டது. இந்நிலையில், தற்போது தேசிய வங்கிகள், தங்களின் நிரந்த கால வைப்பு வட்டி விகிதத்தை, 6.8 சதவீதமாக குறைத்து விட்டன.

ரூ. 200 கோடி வருமான இழப்பு:
இதனால், டிபாசிட் காலக்கெடு முடியும்போது, நடப்பில் இருக்கும் வட்டி விகிதம் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு, அதற்கேற்ற வட்டியை வங்கிகள் வழங்குவது வழக்கம். அதன்படி, தற்போதய வட்டி விகிதத்தின் படி, நடப்பு நிதியாண்டு, தேவஸ்தானத்திற்கு, 600 கோடி ரூபாய் மட்டுமே வட்டியாக கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு, 200 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar